என் மலர்
நீங்கள் தேடியது "A23a"
- அன்டார்க்டிகா பனிப்பாறைகளிலேயே மிக பெரியது ஏ23ஏ
- ஏ23ஏ உருகும் போது அழகான வளைவுகள், குகைகள் தோன்றி உள்ளன
தென் துருவத்தில் உள்ள, முழுவதும் பனியால் சூழப்பட்ட, பனிப்பாறைகள் நிறைந்த கண்டம், அன்டார்க்டிகா (Antarctica).
இங்கு மனிதர்கள் வசிப்பது முடியாததால், ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் மட்டுமே சென்று வருவது வழக்கம்.
இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியது, ஏ23ஏ (A23a).
1986களிலேயே ஏ23ஏ அப்பிரதேசத்தின் கடல் பகுதியிலிருந்து உடைந்து நகர்ந்து செல்ல தொடங்கியது.
சுமார் 30 வருடங்களாக வெட்டல் கடல் (Weddell Sea) பகுதியின் ஆழத்தில் சிக்கி அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏ23ஏ பனிப்பாறை, சுமார் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
அங்கு உள்ள பனி நீர் சுழற்சியால் தென் ஆர்க்னி தீவை (South Orkney Islands) நோக்கி இது மெதுவாக பயணிக்க தொடங்கி உள்ளது.
பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
தினம் தினம் சிறிதாக உருகும் ஏ23ஏ பனிப்பாறையில் மிக பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.
எப்பொழுது என உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் சில ஆண்டுகளில் ஏ23ஏ முழுவதும் உருகி விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.