search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhaar connection"

    • கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும்.
    • மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    தமிழக மின்சார வாரியம், மானியம் பெறும் இணைப்புகளை வரன்முறைப்படுத்தும் நோக்கில், மின்நுகர்வோரின் ஆதார் விவரம் இணைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களாக ஆதார் இணைப்பு பணி ஆன்லைன் வாயிலாக நடந்தது. உதவி மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

    திருப்பூர் மாவட்டத்தில் ஆதார் இணைப்பு பணி மந்தமாக நடந்தது. அரசு அளித்த அவகாசத்துக்குள் ஆதார் இணைப்பு பணி 80 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்தது. இருப்பினும் ஒரே உரிமையாளர், ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.

    கட்டடத்தில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் ஆதார் விவரம் மட்டுமே இணைக்கப்பட வேண்டும். மாறாக உரிமையாளர் ஆதார், அனைத்து இணைப்புகளிலும் இணைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளில், ஒரே குடும்ப உறுப்பினரின் ஆதார் இணைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. வீடு வீடாக சென்று வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் விவரம் இணைக்க அறிவுறுத்தப்பட்டது.அதற்கு பிறகும் இரட்டைப்பதிவு போன்ற ஒரே ஆதார் பதிவு விவரங்களை சேகரித்து மீண்டும் தற்போது பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. மின் களப்பணியாளர், வீடு வீடாக சென்று மீண்டும் ஆதார் இணைக்க அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், மின்வாரியத்தில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்படவில்லை. இருப்பினும் வாரிய அறிவிப்பை ஏற்று அனைவரும் ஆதார் இணைத்தனர். ஒரே உரிமையாளரின் பல கட்டடங்களுக்கு ஆதார் இணைப்பதில் சிக்கல் இருக்கிறது. வாடகை வீட்டில் குடியிருப்பவரின் ஆதார் இணைக்கப்பட வேண்டும். அதற்காக மீண்டும் வீடு வீடாக கள ஆய்வு நடத்தி வருகிறோம். எதிர்காலத்தில் மின் கட்டணம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. மின்நுகர்வோர் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றனர்.

    • சுமார்7 லட்சம் பேர் இன்னும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கவில்லை.
    • இன்றுடன் நிறைவடையவிருந்த அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    சென்னை:

    மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்வாரியம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்புப் பணிக்காக, தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலான மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கவில்லை. இதையடுத்து, கூடுதல் காலஅவகாசம் வழங்க வேண்டும் என்ற மின் நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை மின் வாரியம் காலக்கெடுவை நீட்டித்தது. அதன்பிறகு, பிப்ரவரி 15-ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது.

    நேற்று மாலை வரை 2.59 கோடி மின்நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். சுமார்7 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை. இந்தநிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 2.80 கோடி பேர் இணைத்துள்ளனர். மின் இணைப்பை ஆதாருடன் இணைக்காமல் இன்னும் 7 லட்சம் பேர் உள்ளனர். மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் இணைக்க வேண்டி இருப்பதால் இன்றுடன் நிறைவடையவிருந்த அவகாசம் வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்கு பின் அவகாசம் வழங்கப்படமாட்டாது. தொழில்நுட்பம் கோளாறு போன்ற பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதிமுகவினர் சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல. தோல்வியின் விளிம்பில் உள்ள அதிமுகவினர் விரக்தியில் பேசிக் கொண்டு இருக்கின்றனர் என்றார்.

    • மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது.
    • ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    சென்னை:

    மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. தமிழகத்தில் உள்ள 2.67 கோடி மின் நுகர் வோர்களின் ஆதாரை இணைக்கும் பணி நவம்பர் 15-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பொது மக்கள் இணைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

    பின்னர் துறை சார்பாக விளக்கப்பட்டதை தொடர்ந்து ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது.

    இதற்காக 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கால அவகாசம் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    பிரிவு அலுவலகங்களில் மட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேரின் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

    ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மின் வாரியம் வழங்கிய அவகாசம் முடிய 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது.

    அதனால் மேலும் அவகாசம் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகரிகள் கூறியதாவது:-

    ஆதார் இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் சிலர் இணைக்காமல் இருப்பதால் மேலும் சில நாட்கள் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் 30-ந் தேதி வெளியிடுகிறார். மின் இணைப்புடன் ஆதார் இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று யாரும் கூறவில்லை. மின் கட்டணம் செலுத்தும்போது அவர்களின் ஆதார் எண் கேட்டு பதிவு செய்யப்படும்.

    எனவே இணைக்காத மின் நுகர்வோர்கள் விரைவில் இணைத்து மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மின் கட்டண இணைப்புடன் ஆதார் எண் இணைத்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது.
    • படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்துவிட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    100 யூனிட் மானியம் பெறும் பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதாரை பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் முதல் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.

    மின் வாரிய அலுவலகங்களிலும் ஆதார் நம்பரை இணைத்து கொடுக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் நம்பரை இணைத்து வருகிறார்கள்.

    படித்த இளைஞர்கள் பலர் தங்களது செல்போனில் வெப்சைட்டுக்குள் சென்று எளிதில் ஆதாரை இணைத்துவிட்டனர். மற்ற பொதுமக்கள்தான் கம்ப்யூட்டர் மையம் அல்லது மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.

    மொத்தம் உள்ள 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில் இதுவரை 2811 பிரிவு அலுவலக சிறப்பு முகாம்கள் மூலம் 1 கோடியே 52 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். ஆன்லைன் மூலம் 17 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இது தவிர மின்வாரிய அலுவலகங்கள் மூலம், இணைத்தவர்களையும் சேர்த்து நேற்றுவரை மொத்தம் 2.9 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளதாக மின் சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    ஆதாரை இணைப்பதற்கு ஜனவரி 31-ந் தேதி வரை காலக்கெடு உள்ளது. எனவே ஆதாரை இணைக்காத மின் நுகர்வோர் உடனடியாக மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ×