என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Aadi Paurnami"
- தாயும், தந்தையுமாக மட்டுமல்ல குருவாகவும் இறைவன் இருக்கின்றார் என்பது இதன் மூலம் விளக்கப்படுகின்றது.
- குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் தோற்றமும் இதுவாகவே அமைந்துள்ளது.
ஆதியிலே குறிப்பிட்ட சனகர், சனா தனர், சனந்தனர், சனற்குமாரர் ஆகிய முனிவர்களுக்கு ஞானோபதேசம் வழங்கிய நாளே ஆடி மாதப் பவுர்ணமி நாளாகும்.
ஞானவடிவினராகக் கைலாச மலையில் கல்லால மரத்தின் நிழலிலே தென்திசை நோக்கி அமர்ந்திருந்த சிவபிரானிடம் மேற்படி முனிவர்கள் நால்வரும் தாம்பல வேதாகமங்களைக் கற்றும் தமக்கு அவற்றிலே மயக்க நிலை இருப்பதாகவும், அவற்றைப் போக்கியருள வேண்டும் என்றும் தொழுது நின்றனர்.
சிவபிரான் அம்முனிவர்களுக்குச் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய ஆகமப் பொருள் விளக்கத்தை விளக்கியதுடன் வலக்கையைச் சின் முத்திரையாகப் பிடித்து மார்பிலே வைத்து யோக சமாதியடைந்து ஞானத்தின் தத்துவத்தையும் விளக்கியருளினார்.
அத்துடன் சின் முத்திரை மூலம் பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களின் இயல்பு நிலைகளையும் அவர்களுக்குத் தெளிவு படுத்தினார். அறிவூட்டி அருள் செய்தார்.
தாயும், தந்தையுமாக மட்டுமல்ல குருவாகவும் இறைவன் இருக்கின்றார் என்பது இதன் மூலம் விளக்கப்படுகின்றது.
குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் தோற்றமும் இதுவாகவே அமைந்துள்ளது.
குருவின் முக்கியத்துவம் இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது. தெளிவுறுத்தப்படுகின்றது.
எத்தனை கற்றறிந்தவர்களாக இருந்தாலும் சிறந்த வழிகாட்டுதல் தேவை.
தெளிவுறுத்தல்கள் தேவை என்பது இதன் மூலம் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
இதனால் தான் இந்து அரச குமாரர்களும் குருகுலத்திற்குச் சென்று குருவுக்குப் பணிவிடை செய்து பக்குவப் பட்ட மனநிலையில் தமக்குரிய கல்வியைக் கற்க வேண்டும் என்ற விதியிலிருந்தது.
சமுதாயத்தில் அன்று அரசர்களுக்கும் மேலாக, மேன்மை கொண்டவர்களாகக் குருவுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது.
இன்று உலகிலே ஆசிரிய தினமென்று ஆண்டிலே ஒருநாள் அண்மைக் காலகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஆசிரியரின் அதாவது குருவின் பெருமையை உணர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் இந்துக்களோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குருவின் பெருமையையும், தேவையையும் மேன்மையையும் போற்றுவதை ஒரு சமயம் சார்ந்த பண்பாக, மரபாக, வழி பாடாகக் கொண்டுள்ளனர்.
குரு பவுர்ணமி அதாவது ஆடிப் பவுர்ணமி தினத்தில் சிவபெருமானைக் குருவாகக் கொண்டு வணங்கி, வழிபாடுகள் செய்யப்படுகின்றது.
அதாவது ஆசிரியர் பெருமை போற்ற இது ஒரு வழிபாட்டு நாளாயமைகின்றது.
சமயக்குரவர்களுக்கும், சந்தான குரவர் களுக்கும், நாயன்மார்களுக்கும், ஆழ்வார் களுக்கும் ஏனைய பெரியார்களுக்கும் வழிபாட்டுடன் கொண்டாடப்படும் குரு பூசைகள், இந்துக்களின் வழிகாட்டி நெறிப்படுத்திய ஆசிரியர்களான குருக்களுக்குச் செய்யும் நன்றியுணர்வுடன் கூடிய வழிபாடாகும்.
குருவை நன்றியுணர்வுடன் போற்றும் பாரம்பரிய இந்துக்களின் ஆசிரிய தினமுமாகும்.
குரு பவுர்ணமி நன்னாளில் உலகிலே அறநெறிகள் பெருகி அன்பும், பண்பும் கொண்ட மனிதகுலம் உருவாக உறுதியுற குருவாக இருந்து அருள்செய்யும் அருளாளன் எம்பெருமான் சிவபிரானைத் தொழுது அவனது கருணை பெருகி நலம் கொழிக்க வழிபடுவோம்.
- இந்து சமய வழிபாட்டில் குத்துவிளக்கு மிக முக்கிய அங்கமாய் இருக்கின்றது.
- காமாட்சி அம்மன் விளக்குக்கு இணையாக தெய்வீக அம்சம் பொருந்தியது.
இத்தினத்தில் பொதுவாக அம்மனுக்கு புடவை சாற்றி வழிபட்டால் நிறைய நற்பலன்களை அடையலாம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆடி மாத செவ்வாய்கிழமைகளில் இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றுவது நல்லது.
இந்து சமய வழிபாட்டில் குத்துவிளக்கு மிக முக்கிய அங்கமாய் இருக்கின்றது.
காமாட்சி அம்மன் விளக்குக்கு இணையாக தெய்வீக அம்சம் பொருந்தியது.
இந்த குத்து விளக்கை ஏற்றுவதன் மூலம் பஞ்ச பூத சக்தியையும் கவர்ந்திழுத்து இறையருளை முழுமையாக நமக்கு பெற்று தரும்.
- வீட்டில் அம்மன் படங்களுக்கு பூஜை நடத்தலாம்.
- பெண்கள் ஆடி விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும்
ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால் அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து வீட்டிலோ அல்லது கோவிலுக்கோ சென்று கும்பிட வேண்டும்.
வீட்டில் அம்மன் படங்களுக்கு பூஜை நடத்தலாம்.
ஆடி பவுர்ணமி தினத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது நல்லது.
பெண்கள் ஆடி விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும் என்றும் வியாபார தடைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.
- ஆடி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி பொதுவாக உத்திராடம் நட்சத்திரத்தில் வரும்.
- திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
ஆடி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி பொதுவாக உத்திராடம் நட்சத்திரத்தில் வரும்.
இந்த ஆடி பவுர்ணமி தினம் மகா விஷ்ணுவை வழிபடுவதற்கான மிக உன்னத நாள்.
பிள்ளையாரையும் வழிபடுவார்கள்.
திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
இந்த அற்புத நாளில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி திருமாலை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும்.
புண்ணியம் கிட்டும். உயர் பதவிகளை அடையலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்