search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aarudhra Gold Trading Scam"

    • ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
    • ரூசோ 3 நாட்களில் ரூசோ விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்

    ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 21 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ரூசோ உட்பட பல கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூசோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. ரூசோ 3 நாட்களில் ரூசோ விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென்றும், அப்படி அவர் சரணடைய வில்லையென்றால் அவரை கைது செய்யவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர்.
    • மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருந்தார்.

    சென்னை:

    சென்னை அமைந்தகரையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் வசூலித்த நிதி நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகி விட்டனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த மோசடியில் தொடர்புடைய ஆரூத்ரா அதிபர் ராஜசேகர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

    துபாயில் பதுங்கி இருக்கும் அவரை பிடிக்க போலீஸ் வியூகம் வகுத்திருந்தது. கடந்த 3 வருடமாக தேடப்பட்டு வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

    ×