என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஆருத்ரா கோல்டு மோசடி: ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து
- ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
- ரூசோ 3 நாட்களில் ரூசோ விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்
ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர்நீதிநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2438 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 21 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் ரூசோ உட்பட பல கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூசோவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூசோவிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. ரூசோ 3 நாட்களில் ரூசோ விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டுமென்றும், அப்படி அவர் சரணடைய வில்லையென்றால் அவரை கைது செய்யவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.