search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abhishek verma"

    உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா தங்கப் பதக்கம் வென்றதுடன், ஒலிம்பிக் வாய்ப்பையும் உறுதி செய்தார். #ShootingWorldCup #AbhishekVerma #TeamIndia
    பீஜிங்:

    சீன தலைநகர் பீஜிங்கில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்  பிஸ்டர் பிரிவில், இந்தியாவின் அபிஷேக் வர்மா 242.7 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ரஷிய வீரர் ஆர்டம் செர்னோசோவ் 240.4 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். கொரிய வீரர் சியுங்வூ ஹான் 220 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்த வெற்றியின்மூலம், ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் அபிஷேக் வர்மா தனது இடத்தை உறுதி செய்தார். இதேபோல் அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டேலா, சவுரப் சவுத்ரி, திவ்யன்ஷ் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளனர். #ShootingWorldCup #AbhishekVerma #TeamIndia
    அமெரிக்காவில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் அபிஷேக். இரண்டு பதக்கங்கள் வென்றார். #ArcheryWorldCup
    உலகக்கோப்பை வில்வித்தை தொடர் அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் அபிஷேக் வர்மா அரையிறுதியில் ரஷியாவின் அன்டோன் புலாயெவ்-ஐ 150 புள்ளிகள் பெற்று வீழ்த்தினார்.

    ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹன்செனிடம் சறுக்கினார். ஹன்சன் 140 புள்ளிகள் சேர்க்க, அபிஷேக் வர்மாவால் 123 புள்ளிகள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தியடைந்தார்.



    கலப்பு அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா உடன் இணைந்து விளையாடினார். இதில் இந்த ஜோடி 147-140 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

    முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி பெண்களுக்கான தனிப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். பெண்களுக்கான அணிப்பிரிவில் அட்டானு தாஸ் உடன் இணைந்து வெண்கலப் பதக்கத்திற்கும் போட்டியிடுகிறார். இதனால் குமாரி இரண்டு பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.
    ×