search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accident Insurance scheme"

    • 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • 5 நிமிடங்களில் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.

    திருப்பூர் :

    தபால் துறையின் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி 399 ரூபாயில் 10 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக திருப்பூர் கோட்ட தபால் கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய போஸ்ட் பேமென்ட் வங்கி, டாடா ஏ.ஐ.ஜி., ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இதில் 18 முதல் 65 வயது உள்ளவர்கள் சேரலாம், தங்கள் பகுதியில் உள்ள தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து ரூ. 399 செலுத்தி5 நிமிடங்களில் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர மற்றும் பகுதி ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால், 10 லட்சம் வரையிலும் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வழங்கப்படும்.புற நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 30 ஆயிரம், விபத்தில் மரணம் பக்க வாதம் ஏற்பட்டவரின் இரு குழந்தைகள் கல்வி செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். விபத்து நேரங்களில் ஏற்படும் நிதி நெருக்கடி உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தினரின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். திருப்பூர் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×