search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghanistan Test"

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்பது குறித்து கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ள விக்கெட் கீப்பர் சகாவிற்கே நம்பிக்கை இல்லை. #INDvAFG
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்து பெற்றது. அந்த அணி வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்டை இந்தியாவிற்கு எதிராக விளையாடுகிறது. இந்த டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.

    இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம்பிடித்திருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது.



    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் பங்கேற்பது குறித்து சகாவிற்கு முழு நம்பிக்கை இல்லை. இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘பிசிசிஐ என்னுடைய காயம் குறித்து ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து வருகிறது. இறுதியான முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கு தயாராகுவேனா என்பது தெரியவில்லை. அது என்னுடைய கையில் இல்லை.

    தற்போது சகாவின் காயம் குறித்து அறிய பிசிசிஐ எக்ஸ்-ரே அறிக்கைக்காக காத்திருக்கிறது. அந்த அறிக்கைக்குப் பிறகுதான் அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா? என்பது தெரியவரும்.
    காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சகா பங்கேற்பது சந்தேகமான நிலையில் தினேஷ் கார்த்தி-க்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #DineshKarthik #WriddhimanSaha #AfghanistanTest
    சென்னை:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் டெஸ்ட் விளையாட ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அங்கீகாரம் அளித்தது.

    அந்த அணி தனது அறிமுக டெஸ்டில் இந்தியாவுடன் மோதுகிறது. இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இந்த டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் (ஜூன் 4-ந்தேதி) பெங்களூரில் தொடங்குகிறது.

    இந்த டெஸ்டில் இருந்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரகானே கேப்டனாக செயல்படுவார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

    அணியில் இடம் பெற்று இருந்த விக்கெட் கீப்பர் விரித்திமான் சகா ஐ.பி.எல். போட்டியின் போது காயம் அடைந்தார். கொல்கத்தாவுக்கு எதிரான ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் அவருக்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னைக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஆடவில்லை.

    காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டிலும் ஆடுவது சந்தேகம். இதனால் அவர் இடத்தில் சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    தினேஷ் கார்த்திக் ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அவரது பேட்டிங்கும், விக்கெட் கீப்பிங்கும் நன்றாக இருந்தது. இதனால் அவர் அணி இடம் பெறுவதற்கான வாய்ப்பில் அதிகமாக இருக்கிறார். ஐ.பி.எல்.லில் அவர் 498 ரன் எடுத்தார்.

    தினேஷ் கார்த்திக் கடைசியாக 2010-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடி இருந்தார்.

    இதேபோல பார்த்தீவ் படேலும் வாய்ப்பு இருக்கிறார். விரித்திமான் சகா இடத்தில் இடம் பெற இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.#DineshKarthik #WriddhimanSaha #AfghanistanTest
    கை பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சகா பங்கேற்பது சந்தேகம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் விருத்திமான் சகா. இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் விளையாடியது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதில் அவரின் விரலில் முறிவு ஏற்பட்டது.



    இந்த காயம் குணமடைய ஐந்து முதல் 6 வாரம் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சகா விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகல் விரைவில் வெளியாகும். ஒருவேளை காயம் குணமடைய 6 வாரங்கள் தேவைப்பட்டால் இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவது சந்தேகம்தான்.
    இந்திய கேப்டன் விராட் கோலியின் முடிவால் நான் ஆச்சரியம் அடைந்தேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்தார். #AfghanistanTest #ViratKohli #Clarke
    கொல்கத்தா:

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் மைக்கேல் கிளார்க். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற்
    அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடாதது ஆச்சரியம் அளிக்கிறது. என்னை பொறுத்தவரை டெஸ்ட் மேட்சுக்கு தான் முக்கியம் தருவேன். எனவே விராட் கோலியின் முடிவு எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்துள்ளது. விளையாடாமல் இருப்பது அவரது சொந்த முடிவு என தெரிவித்துள்ளார்.



    ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த சமயத்தில் விராட் கோலி இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதால் இந்த தொடரில் அவர் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #AfghanistanTest #ViratKohli #Clarke
    ×