என் மலர்
நீங்கள் தேடியது "Agnimitra Paul"
- மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த மம்தா பானர்ஜி முன்மொழிந்ததாக தகவல்.
- வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை நிறுத்தவும் மென்மொழிவு.
இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது ஜனவரி மாதத்திற்குள் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும், வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தியை நிறுத்த வேண்டும் ஆகிய கருத்துகளை முன்மொழிந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பதிலடியாக மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் அக்னிமித்ரா பால், தைரியம் இருந்தால் நீங்கள் நிற்கலாமே எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பா.ஜனதா தலைவர் அக்னிமித்ரா பால் கூறியதாவது:-
இடங்கள் பங்கீட்டிற்கு முன், பிரியங்கா காந்திக்குப் பதிலாக மம்தா பானர்ஜி மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் பேட்டியிட தைரியம் இருந்தால், அதை மம்தா செய்ய வேண்டும். நீங்கள் பிரதமராக விரும்புகிறீர்கள். சரிதானே? நம்முடைய முதல்வர் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட வேண்டும். அவருக்கு எவ்வளவு தைரியம் என்று பார்ப்போம்.
இவ்வாறு அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ளார்.
2019 தேர்தலின்போது வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட இருப்பதாக வதந்திகள் வெளியாகின. இறுதியில் அவருக்குப் பதிலாக அஜய் ராய் என்பவர் நிறுத்தப்பட்டார்.