என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » alok varma
நீங்கள் தேடியது "Alok Varma"
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அலோக் வர்மா டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். #AlokVarma #CBIDirector
புதுடெல்லி:
சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர்.
இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும், ஊழல் விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பையடுத்து அலோக் வர்மா இன்று காலை டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #AlokVarma #CBIDirector

இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது, மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும், ஊழல் விசாரணை முடியும் வரை அலோக் வர்மா கொள்கை முடிவு எதுவும் எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பையடுத்து அலோக் வர்மா இன்று காலை டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #AlokVarma #CBIDirector
சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்பதால் ரபேல் விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #AlokVerma #Rafaleprobe #Rahulgandhi
புதுடெல்லி:
மத்திய அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா அந்தப் பதவியில் தொடர சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வெளியானதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றம் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அவர்கள் ரபேல் விவகாரத்தில் இருந்து ஓடிப்போக முடியாது. அது நடக்காது. மக்கள் மன்றத்தில் விவாதம் நடத்தாமல் மோடி ஓடினார். ரபேல் விவகாரத்தில் உண்மை இருப்பதால் உண்மையிடம் இருந்து யாரும் தப்பியோடி விட முடியாது.
ரபேல் ஒப்பந்தத்தில் மக்களின் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து தனது நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்தது சந்தேகத்தின் நிழல் துளிகூட இல்லாமல் இந்த விசாரணையில் தெரியவரும். அடுத்து இனி என்ன நடக்கும்? என்று பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #CBIDirector #AlokVerma #Rafaleprobe #CBIenquiry #Rahulgandhi #AnilAmbani
மத்திய அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா அந்தப் பதவியில் தொடர சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு வெளியானதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றம் வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரபேல் விவகாரம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா தொடரவிருந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் சுப்ரீம் கோர்ட்டால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். நீதி நிலைநாட்டப்பட்டதன் மூலம் எங்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
ரபேல் ஒப்பந்தத்தில் மக்களின் பணம் 30 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து தனது நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்தது சந்தேகத்தின் நிழல் துளிகூட இல்லாமல் இந்த விசாரணையில் தெரியவரும். அடுத்து இனி என்ன நடக்கும்? என்று பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #CBIDirector #AlokVerma #Rafaleprobe #CBIenquiry #Rahulgandhi #AnilAmbani
சி.பி.ஐ. இயக்குநருக்கு லஞ்சப்பணம் கைமாறிய விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். #Delhicourt #ManojPrasad #ManojPrasadbail #briberycase
புதுடெல்லி:
சி.பி.ஐ. இயக்குநராக முன்னர் இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். லஞ்சப்பணம் கைமாறிய இவ்விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை விசாரணை காவலில் அடைத்து வைத்திருந்தனர்.
ராகேஷ் அஸ்தானா
தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனோஜ் பிரசாத் முன்னர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், மனோஜ் பிரசாத்தை இன்று ஜாமினில் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி சந்தோஷ் ஸ்நேஹி மான் உத்தரவிட்டுள்ளார். #Delhicourt #ManojPrasad #ManojPrasadbail #briberycase
×

X