search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amaravati Cooperative"

    • நடப்பாண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • 10 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணி மட்டும் துவங்கியது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடமிருந்து அரவைக்கு 2,184 ஏக்கர் பதிவு செய்யப்பட்டு நடப்பா ண்டு ஒரு லட்சத்து ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கரும்பு அரவை துவக்கு வதற்காக, ஆலையிலுள்ள பாய்லர்கள் இளஞ்சூடு ஏற்றும் பணி கடந்த 10ந் தேதி துவக்கப்ப ட்டு நேற்று முதல் ஆலையில் கரும்பு அரவை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அமராவதி சர்க்கரை ஆலையிலுள்ள பழமையான எந்திரங்களை புதுப்பிக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில் மாநில அரசு நிதி ஒது க்கவில்லை. நடப்பாண்டு, 10 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணி மட்டும் துவங்கியது. குறிப்பாக ஆலை அரவைக்கு, வாகனங்களி லிருந்து கரும்பு எடுத்து கன்வேயருக்கு வழங்கும் ரோப் வகை நவீன எந்திரங்கள் நிறுவும் பணி ரூ.2 கோடி மதிப்பில் துவங்கியது. நிதி வழங்குவதில் தாமதம் காரணமாக பணி முடியவில்லை. இதனால் ஏற்கனவே அறிவித்த தேதியில் அரவை துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. குறிப்பி ட்ட காலத்தில் அறுவடை செய்யாவிட்டால் எடை இழப்பு ஏற்படும். கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி அரவை துவக்கி யும், எந்திரங்கள் பழுது, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்க ளினால் மகசூல், சர்க்கரை கட்டுமானம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டது. நடப்பாண்டும், அரசு மற்றும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக கரும்பு அரவை துவங்காமல் கரும்பு காய்ந்து நஷ்டமடைந்து வருகிறோம் என்றனர்.

    இது குறித்து சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் சண்முகநாதன் கூறுகையில், எந்திரம் பொருத்தும் பணி வரும் 24-ல் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். வரும் மே 1-ந் தேதிக்குள் அரவை துவங்கும் என்றார்.

    ×