search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "American Airlines flight"

    • அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன.
    • தொழில்நுட்ப கோளாறு சரியானதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சேவையை தொடங்கின.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன.

    விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானங்கள் நாடு முழுவதும் தரையிறக்கப்பட்டன. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து சுமார் 2மணி நேரத்துக்கு பின் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் மீண்டும் சேவையை தொடங்கின.

    உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சக பயணிகளும், ஊழியர்களும் புகார் தெரிவித்ததால் யூத தம்பதி விமானத்தில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#Jewishfamily #AmericanAirlines
    நியூயார்க்:

    அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள சவுத் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் யோச்சி அட்லர் (37). இவரது மனைவி ஜென்னி (31). யூத தம்பதியரான இவர்கள் விடுமுறையை கழிக்க மியாமிக்கு தனது 19 மாத பெண் குழந்தையுடன் வந்திருந்தனர். அங்கிருந்து கடந்த 23ந்தேதி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டெட்ராய்டு நகருக்கு புறப்பட்டனர். விமானத்தில் ஏறி இவர்கள் அமர்ந்து இருந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் கட்டாயப்படுத்தி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    அட்லரின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சக பயணிகளும், ஊழியர்களும் புகார் தெரிவித்ததாகவும் அதனால் அவர்கள் இறக்கி விடப்பட்டதாகவும் விமான நிர்வாகம் கூறியது. ஆனால் இன விரோதம் காரணமாக தாங்கள் கீழே இறக்கி விடப்பட்டதாக அட்லர் தெரிவித்தார். #Jewishfamily #AmericanAirlines
    ×