search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amruth project"

    • அம்ருத் திட்டத்தின்கீழ் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது
    • புதிய குடிநீா் இணைப்பு தேவையென்றால் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவில் நகராட்சி பகுதியில் அம்ருத் திட்டத்தின்கீழ் 16,462 குடிநீா் இணைப்புகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.நகராட்சியில் அம்ருத் 2.0 திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு நகா்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அம்ருத் 2022 - 23 திட்டத்தின் கீழ் ரூ. 36.44 கோடி மதிப்பீட்டில் நெருக்கடி மிகுந்த நகா்ப்புற வசிப்பிட மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இப்பணிகள் 2024 பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்படும். 10 புதிய மேல்நிலை குடிநீா் தொட்டிகள், 142.17 கிலோ மீட்டா் நீளத்துக்கு குடிநீா் குழாய் பதிப்பு, 16,462 குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    புதிய குடிநீா் இணைப்பு தேவையென்றால் நகராட்சி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 

    • திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது.
    • இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் தொழிலை நம்பியுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களும், தொழில் நிமித்தமாக இங்கு வந்து செல்கின்றனர். இருப்பினும், கட்டமைப்பு வசதிகளில் சற்று பின்தங்கியுள்ளது.தற்போது வேகமாக வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

    இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் தொழிலை நம்பியுள்ளனர். திருப்பூர், பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதியில் மட்டும் 1.60 லட்சத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.

    வடமாநில தொழிலாளர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் ரெயில்கள் வழியாக வந்து செல்கின்றனர். அத்துடன் ஆயிரக்கணக்கான பயணிகள், தினமும் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இருப்பினும் கோவை, ஈரோடு ரெயில்வே சந்திப்புகளுடன் ஒப்பிடுகையில் திருப்பூர் ரெயில் நிலையம் வசதிகளில் பின்தங்கியுள்ளது.மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் திருப்பூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்திட ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் முழுமையாக ஆலோசித்து மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் தொழில் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:- திருப்பூர் ரெயில் நிலையம் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் மேம்படுத்தப்படுமென தெரிவித்துள்ளனர். தெற்கு பகுதியில் உள்ளது போலவே வடக்கு பகுதியிலும், இரு சக்கர வாகன நிறுத்தம், டிக்கெட் கவுன்டர், புக்கிங் சென்டர் போன்ற வசதிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ெரயில்வே பயணிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். ரெயில்வே சந்திப்பில் உள்ள அனைத்து வசதிகளும் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு கிடைக்கும். அம்ரூத் திட்டத்தில் ரெயில் நிலையம் மேம்பாடு செய்வது தொடர்பாக விரைவில் தொழில் அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

    ×