search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ancestral temples"

    • திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது.
    • குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும்.

    திருப்பூர் :

    இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜூன் சம்பத் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- கீழ்பவானி பாசன விவசாயிகள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களது கோரிக்கை நியாயமானது. எனவே நீா்பாசனத் துறை அமைச்சா், மாவட்ட கலெக்டர் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

    விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுவது உறுதியான தகவல் கிடையாது. அப்படியே இருந்தாலும் குலதெய்வக் கோவில்களை பூட்டுவது சரியானது அல்ல. பல இடங்களில் பட்டியலின மக்கள் திரெளபதி அம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா். எனவே இந்த விஷயத்தில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வுகாண வேண்டும்.

    அதேபோல கரூா் மாவட்டத்திலும் ஒரு கோவிலைப் பூட்டியுள்ளனா். குலதெய்வக் கோவில்களை பூட்டுவதை மிகப்பெரிய தெய்வ குற்றமாக நாங்கள் கருதுகிறோம். குலதெய்வ வழிபாடு என்பது ஜாதிக்கு அப்பாற்பட்டதாகும். எனவே குலதெய்வக் கோவில்களை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என்றாா்.

    இதையடுத்து, சக்தி திரையரங்கம் அருகில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சனாதன இந்து தா்ம எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சமூக செயற்பாட்டாளா் நடிகை கஸ்தூரி, இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    ×