என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Anti-Labor Laws"
- அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்தும், அரசு வெளியிட்டுள்ள அரசாணை 152-ன்படி சுகாதார பணியாளர்களை அரசு தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி மாவட்டத்தில் திருப்பூர் மாநகரம், அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய 6 மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கவர்னரின் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து வருகிற 29-ந் தேதி சென்னையில் நடைபெறும் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. யின் சார்பில் 500 தொழிலாளர்கள் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.