என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Arif Muhammad Khan"
- கேரளா ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
- ஆர்.எஸ்.எஸ்.காரர்களை துணைவேந்தர்களாக நியமிக்க முயற்சிக்கிறார் என குற்றச்சாட்டு.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பல்கலைக்கழக நியமன விவகாரம் தொடர்பாக, ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் அம்மாநில மார்க்சிஸ்ட் அரசுக்கும் இடையே மோதல் முற்றியுள்ளது. கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ராஜினாமா செய்ய வலியுறுத்தி ஆளுநர் மாளிகை தரப்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநர் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்கள் பதவியை தொடரலாம் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆரிப் முகமது கானுக்கு எதிராக ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவனந்தபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், கேரள ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு வேலை செய்கிறார் என்றார்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்களை துணைவேந்தர்களாக நியமிக்க அவர் முயற்சிக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆளுநர் தனக்கு ராஜ அதிகாரம் இருப்பதாக நினைப்பது வெட்கக்கேடானது, ஆளுநரின் செயல்பாடு கேரள உயர்கல்வித் துறையை அழிக்கும் முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.