search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artificial intelligence tools"

    • ஏ.ஐ. மூலம் பிரபலங்களின் புகைப்படங்களை கற்பனை செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
    • செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஜெனிபர் மகள் போல பேசி அவரிடம் மோசடிக்கு முயன்றதும் தெரியவந்தது.

    சமீப காலமாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் புகைப்படங்களை கற்பனை செய்து வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்த செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஒரு பெண்ணிடம் ரூ.8¼ கோடி மோசடி முயற்சி நடந்த சம்பவம் அமெரிக்காவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    அங்குள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த ஜெனிபர் டெஸ்டெபனோ என்ற பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர்புறம் அவரது 15 வயது மகள் அழும் குரல் கேட்டது. உடனே ஜெனிபர் என்ன ஆனது என்று கேட்டதற்கு, நான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன் என கூறி அழதொடங்கினார். அப்போது ஜெனிபரின் மகள் பனி சறுக்கு விளையாட சென்றிருந்தார். இதனால் தனது மகள் ஏதோ ஆபத்தில் சிக்கி கொண்டார் என நினைத்த ஜெனிபர் அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது ஒரு ஆண், ஜெனிபரின் மகளை மிரட்டல் குரல் கேட்டது. பின்னர் ஜெனிபரிடம் பேசிய அந்த நபர் உனது மகளை கடத்திவிட்டோம். ஒரு மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8¼ கோடி ரூபாய்) கொடுத்தால் விட்டு விடுகிறோம் என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெனிபர் தனது மகளின் தோழியின் அம்மாவை தொடர்பு கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் மூலம் போலீஸ் உதவியை நாடிய போது ஜெனிபரின் மகளை யாரும் கடத்தவில்லை என்பதும், செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் ஜெனிபர் மகள் போல பேசி அவரிடம் மோசடிக்கு முயன்றதும் தெரியவந்தது. எனினும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×