என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Asia Cup hockey"
- இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது.
- லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
ஹூலுன்பியர்:
8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
தனது தொடக்க ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று ஜப்பானை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய இந்திய வீரர்கள் முதல் 3 நிமிடங்களுக்குள் 2 கோல் (சுக்ஜீத் சிங், அபிஷேக்) கோல் போட்டு மிரள வைத்தனர்.
இதனால் இந்தியாவின் தாக்குதல் யுக்தியை சமாளிக்க ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனாலும் இந்திய வீரர்களின் கோல் மழை ஓயவில்லை. 17-வது நிமிடத்தில் சஞ்சய், 54-வது நிமிடத்தில் உத்தம்சிங், 60-வது நிமிடத்தில் மறுபடியும் சுக்ஜீத் சிங் கோல் அடித்தனர். இதற்கிடையே ஜப்பான் தரப்பில் மோட்சுமோட்டோ 41-வது நிமிடத்தில் கோல் திருப்பினார்.
முடிவில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை துவம்சம் செய்து 2-வது வெற்றியை பெற்றது. ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர் அபிஷேக் கூறுகையில், 'இது அணியின் முழுமையான கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக மேற்கொண்டு, இலக்கை சரியாக எட்டினோம். ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டார்.
மற்றொரு ஆட்டத்தில் சீனா 4-2 என்ற கோல் கணக்கில் மலேசியாவை பதம் பார்த்தது. பாகிஸ்தான்- தென்கொரியா இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் நாளை மலேசியாவை எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இதே மலேசியாவை வீழ்த்தி இருந்தது நினைவு கூரத்தக்கது.
- ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை.
- இந்திய அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது.
8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தென் கொரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இதன்மூலம் ஆசிய கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஆசியக் கோப்பை ஜூனியர் மகளிர் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை புரிந்துள்ளது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது'குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "2023 மகளிர் ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற எங்கள் இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள். இந்திய பெண்கள் அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது.
அவர்கள் நம் தேசத்தை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர். தங்களின் முன்னோக்கிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்