search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Champions Cup"

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி 5வது முறையாக வென்றது.
    • கோப்பை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    இதில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை சாய்த்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    மற்றொரு அரையிறுதியில் சீனா 2-0 என்ற கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாகிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது.

    இதற்கிடையே, நேற்று மாலை நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா, சீனா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. ஜுக்ராஜ் சிங் ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    பதில் கோல் அடிக்க சீனா தொடர்ந்து முயற்சித்தும் அதில் பலனில்லை. இதனால் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

    அணியினரின் குறிப்பிடத்தக்க செயல்பாடு, ஈடு இணையற்ற மனவுறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய அணி தரப்பில் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங், மன்தீப் சிங் கோல் அடித்தனர்.
    • தென் கொரியா தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் கோல் அடித்தனர்.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. 12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    இந்நிலையில், 5ம் நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், மாலை 4 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜப்பான்- மலேசியா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் மலேசிய அணி சிறப்பாக விளையாடியது. இதன்மூலம், போட்டியின் ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணி ஜப்பானை வீழ்த்தியது.

    இந்த வெற்றியின் மூலம், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் முதல் அணியாக மலேசிய அணி முன்னேறியது.

    இதைதொடரந்து, மாலை 6.15 மணிக்கு தொடங்கிய 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- சீனா அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டத்தின் 33வது நிமிடத்தில் சீனா அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.

    பின்னர், 39வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இதன்மூலம், ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கோல் கணிக்கில் சீனாவை வீழ்த்தி வென்றது.

    இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு இந்தியா- தென் கொரியா அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிப்பெற்றுள்ளது.

    இந்திய அணி தரப்பில் நீலகண்ட சர்மா, கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங், மன்தீப் சிங் கோல் அடித்தனர்.

    தென் கொரியா தரப்பில் சுங்யன் கிம், ஜிஹன் யாங் கோல் அடித்தனர்.

    லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 8வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஜப்பான் அணிகள் மோதின.
    • ஆட்ட நேர முடிவில் 3-3 என போட்டி சமன் ஆனது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது.

    4ம் நாளான இன்றைய ஆட்டத்தில், முதலில் சீனா- தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது.

    இதைதொடர்ந்து, இன்று மாலை 6.15 மணிக்கு 8வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- ஜப்பான் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்தன.

    இதனால், ஆட்ட நேர முடிவில் 3-3 என போட்டி சமன் ஆனது.

    • 4ம் நாளான இன்றும் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
    • 7வது லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர்.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது.

    12ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    தொடக்க நாளில் மூன்று ஆட்டங்கள் நடந்தன. இதில், தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன. இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    2ம் நாளில், மூன்று லீக் ஆட்டங்கள் நடந்தன. முதலில் நடந்த தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமன் ஆனது.

    3ம் நாளான நேற்று ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், 4ம் நாளான இன்றும் மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இதில், 4 மணிக்கு தொடங்கிய 7வது லீக் ஆட்டத்தில் சீனா- தென் கொரியா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து, இரு அணிகளும் கோல் அடிக்காததால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமன் ஆனது.

    • மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது.
    • ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

    இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    தொடக்க நாளான நேற்று மூன்று ஆட்டங்கள் நடந்தது. தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும், மலேசியா 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்தன.

    இரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை பந்தாடி வெற்றியுடன் இந்தியா கணக்கை தொடங்கியது.

    இந்தியா தரப்பில் கேப்டன் ஹர்மன் பிரீத் சிங், வருண்குமார் தலா இரண்டு கோலும், சுக்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர்.

    தொடர்ந்து, இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தென்கொரியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆட்டம் தொடங்கியது.

    இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடி தலா ஒரு கோல் அடித்தது.

    இதனை தொடர்ந்து, இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் போட்டி சமம் ஆனது.

    • லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
    • முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வருகிற 12-ந் தேதி வரை ஹாக்கி திருவிழா நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா, ஆகிய 6 நாடுகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவை எதிர் கொள்கிறது. இரவு 8.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.

    ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் திகழ்கிறது. சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி பலம் வாய்ந்தது. இரு அணிகள் மோதிய 7 போட்டியில் இந்தியா 6-ல் வெற்றி பெற்றது.

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறை யாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது. 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்று இருந்தது.

    முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு நடை பெறும் முதல் ஆட்டத்தில் தென்கொரியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான தென் கொரியா வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    மாலை 6.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் 3 முறை சாம் பியனான பாகிஸ்தான்-மலேசியா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற போராடும். இதனால் இந்தப் போட்டி விறு விறுப்பாக இருக்கும்.

    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    கடைசியாக 2007-ம் ஆண்டு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×