என் மலர்
நீங்கள் தேடியது "Assemblypolls"
ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார். #YSRCPcandidates #APAssemblypolls #LSpolls
ஐதராபாத்:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பின்னர் அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி தலைவராக தொண்டர்களை வழிநடத்தி வருகிறார்.
ஆந்திராவில் ஏப்ரல் 11-ம் தேதியன்று சட்டசபை மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் ஆந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று வெளியிட்டுள்ளார்.
தற்போது கடப்பா மாநிலத்தில் உள்ள புலிவேந்துவல் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி வரும் தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து சந்திரமவுலி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனத்தலைவருமான டகுபதி வெங்கடேஸ்வர ராவ் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள புர்ச்சூர் சட்டசபை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் 43 பேருக்கு இந்தமுறை சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 41 தொகுதிகளும், சிறுபான்மையினத்தவர்களுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுப் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார். #YSRCPcandidates #APAssemblypolls #LSpolls






