search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asthma Treatments"

    • ஆத்மாவில் மூன்று நிலை உள்ளது.
    • மூச்சு விடுதலில் இறுக்கம் அதிகமாக இருக்கும்.

    நாம் தூங்கி எழுந்த உடனே அதிக தும்மல் வருவதும், மழை மற்றும் பனி காலத்தில் மீண்டும் மீண்டும் சளி ஜலதோஷம் வருவது, சளி பிடித்த போது மூச்சு வெளியே விடுவதில் சிரமமாக இருப்பது, மார்பை இறுக்கி பிடித்தது போன்ற உணர்வு, மூச்சை வெளியே விடும் போது wheeze என்னும் விசில் போன்ற சத்தம் வந்தால் இது மிதமாக இருக்கும் போது ஸ்டெதஸ்கோப் வழியாக கேட்க முடியும். அதுவே தீவிரமாக இருந்தால் மார்பிற்கு அருகில் வந்தாலே கேட்க முடியும். இதை தான் bronchial asthma என்பார்கள்.

    இந்த அறிகுறிகள் சிறு வயதிலும் இருக்கலாம் அல்லது வளர வளர வர தொடங்கலாம். சிறு வயதில் இருந்தே அடிக்கடி ஆக்ஸிஜன் மாஸ்க், நெபுலைஸர் வைப்பதை பார்த்திருப்போம். இந்தியாவில் மட்டும் 25 மில்லியன் மக்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது, அதில் 6 மில்லியன் குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா வருவதற்கான காரணம் குறிப்பாக இது மட்டும் தான் என்று இன்றுவரை எந்த அறிவியலும் கண்டுப்பிடிக்கவில்லை.

    ஆத்மாவில் மூன்று நிலை உள்ளது. mild, moderate, severe. சிலருக்கு வெறும் அலர்ஜியோடு நின்ருவிடும். இன்னும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு தீவிரமாக இருக்கலாம். இது சிறுகுழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

    மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மூச்சு விடுதலில் இறுக்கம் அதிகமாக இருக்கும். சிலருக்கு மைல்டாக இருக்கும். சிலருக்கு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு இருக்கும்.

    தொண்டையிலிருந்து நுரையீரலுக்கு செல்லும் டியூப் முடிச்சுகள் இறுக்கமாகி மூடிக்கொள்ளும். சளி தூசி, மாசு, புகையால் நுரையீரல் பாதிக்கப்படும் போது சளி அதிகமாக வருகிறது. இயல்பாகவே நுரையீரலில் சளி உற்பத்தி இருக்கும். ஆனால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சளி bronchioles துவாரத்தை அடைப்பதால் சுவாசிக்க சிரமம் ஏற்படும்.

    மூச்சு உள்ளிழுத்து வெளியே விடும்போது மிகவும் சிரமமாக இருக்கும் ஏனென்றால் அந்த பாதை முழுவதும் அடைத்துவிடும். மிகச்சிறு துவாரத்தால் மட்டுமே மூச்சு விடுதல் இருக்கும். அதனால் தான் ஆஸ்துமாவின் போது சுவாசிக்க சிரமமாக இருக்கிறது.

    தடுப்பது எப்படி

    ஆஸ்துமாவை முழுவதுமாக குணப்படுத்த முடியாது. ஆனால் அறிகுறியை கட்டுப்படுத்தலாம். இதற்கான குறிப்பிட்ட காரணங்கள் இல்லையென்றாலும் சில காரணங்களால் ஆஸ்துமா வரலாம் என்று சொல்லப்படுகிறது.

    அப்படி சொல்லப்படும் காரணங்களில் மரபணு போக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். குடும்பத்தில் பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும்போது அவை அப்படியே குழந்தைகளுக்கு மாறுகிறது. இதை முழுவதுமாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும் ஆஸ்துமாவை தூண்டும் காரணங்களை கட்டுப்படுத்தலாம்.

    புகை பிடிக்கும் இடம், காற்று மாசடைந்த இடங்களில் ஆஸ்துமா தூண்டுதல் அதிகரிக்கலாம். அந்த இடத்தில் போகாமல் இருப்பதன் மூலம் இதை தடுக்கலாம்.

    ×