search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Australian Selection Committee"

    • நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை.
    • தொடரின் பாதியிலேயே மெக்ஸ்வீனியை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    மெல்போர்ன்:

    இந்தியாவுக்கு எதிரான ஆலன் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் கடைசி 2 போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து தொடக்க வீரர் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டுள்ளார். 25 வயதான அவர் முதல் 3 டெஸ்டிலும் முறையே 10, 0,39,10,9,4 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு முறை கூட அரை சதத்தை தொடவில்லை. அவருக்கு பதிலாக 19 வயதான இளம் பேட்ஸ்மேன் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் மெக்ஸ்வீனி நீக்கம் தொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வு குழுவை முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டதை என்னால் நம்ப முடியவில்லை. தேர்வு குழுவினர் இந்த விஷயத்தில் தவறான முடிவை எடுத்து விட்டார்கள். உஸ்மான் கவாஜாவுக்கு 38 வயதாகிறது. அவர் போதுமான ரன்களை எடுக்கவில்லை. தொடரின் பாதியிலேயே மெக்ஸ்வீனியை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×