search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "auto jewelry robbery"

    மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

    மதுரை:

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 45). இவர் சம்பவத்தன்று பாத்திமா காலேஜில் இருந்து கோசாக்குளத்துக்கு ஷேர் ஆட்டோவில் சென்றார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராமன் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பினார்.

    தல்லாகுளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் கார்த்திகாதேவி (21). இவர் சம்பவத்தன்று அதிகாலை காந்தி மியூசியம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கார்த்திகாதேவி அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இந்த 2 சம்பவங்களும் கடந்த மாதம் முதல் மற்றும் 2-வது வாரத்தில் நடந்துள்ளன.

    நகையை பறிகொடுத்தவர்கள் உடனே தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    கொள்ளை சம்பவம் நடந்த 1 மாதத்துக்கு பின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் தீர்வு கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தவுடன் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்களிடம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவரது மனைவி தவமணி தேவி (வயது 79). இவர் கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி ஷேர் ஆட்டோவில் வெளியே புறப்பட்டார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள், தவமணி தேவி வைத்திருந்த ஒரு பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, காட்டு பாவா வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி குல்பத்நிஷா (வயது 40). இவர் கடந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி வேலை நிமித்தமாக மதுரைக்கு வந்திருந்தார்.

    அன்று காளவாசலில் இருந்து மாட்டுத்தாவணிக்கு குல்பத்நிஷா ஷேர் ஆட்டோவில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி குல்பத் நிஷாவிடம் இருந்த 4 பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றார்.

    மேற்கண்ட 2 சம்பவங்கள் நடந்து 3 மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் தற்போது தான் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×