search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avinasi Temple"

    • 2-ந் தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து சிறிது தொலைவு இழுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது.
    • 8-ந் தேதி காலை மஞ்சள் நீர் விழாவும், மாலையில் மயில் வாகன காட்சியும் நடக்கிறது.

     அவினாசி:

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு 10.30 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் விநாயக பெருமான் மூசிக வாகனத்திலும், சோமஸ்கந்தர் ரிஷப வாகனத்திலும், கருணாம்பிகை அம்மன் காமதேனு வாகனத்திலும், சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், பூமிநீளாதேவி கரி வரதராஜப் பெருமாள் கருட வாகனத்திலும் எழுந்தருளி 63நாயன்மார்களுக்கு காட்சி தந்த வைபவம் நடந்தது. அப்போது வாணவேடிக்கை, அதிர் வேட்டுகள் முழங்க சிவகன பூத வாத்தியம் இசைக்கப்பட்டது. கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு கடைவீதி, மேற்கு ரதவீதி, வடக்குரவீதி, கிழக்கு ரதவீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமி உலா வரும் வீதிகளில் வழி நெடுகிலும், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு பூரம் குடைகள் அமைக்கப்படிருந்தன.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கற்பக விருட்சம், திருக்கல்யாணம், யானை வாகன காட்சிகள் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு பூரநட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகளும், பெருமாளும் திருதேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 2-ந் தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து சிறிது தொலைவு இழுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறது.

    3-ந் தேதி காலை 9 மணிக்கு மீண்டும் தேர் இழுக்கபட்டு நிலை அடைகிறது. 4-ந் தேதி காலை 8 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்படுகிறது. அன்று மாலை வண்டித்தாரை நிகழ்ச்சி நடக்கின்றது. 5-ந் தேதி பரிவேட்டை, 6-ந் தேதி தெப்பதேர் விழாவும், 7-ந் தேதி நடராஜர் தரிசனம் நிகழ்ச்சியும், 8-ந் தேதி காலை மஞ்சள் நீர் விழாவும், மாலையில் மயில் வாகன காட்சியும் நடக்கிறது.

    • இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்திரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.
    • திருவாதிரை நாச்சியாருக்கு மாங்கல்ய நோன்பு ,அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை வாய்ந்த அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆருத்திரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகிற 6-ந் தேதி ஆருத் ரா தரிசன விழா நடக்க உள்ளது. முன்னதாக வருகிற 28-ந்தேதி காலை காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு காலை மாலை இருவேளையும் திருவெம்பாவை மற்றும் பூஜைகள் நடைபெறும். திருவாதிரை நாச்சியாருக்கு மாங்கல்ய நோன்பு ,அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். 6-ந் தேதி அதிகாலை 3 மணி முதல் சிவகாமி அம்மையார் உடனமர் நடராச பெருமானுக்கு 53 திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து மகாதீபாராதனைமற்றும் சிறப்பு வழிபாடு நடைபெறும்.  

    • கோவில் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறவதில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • ஈரோடு மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இக்கோவிலுக்கு வருகின்றனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரானது என சிறப்புவாய்ந்த சோழர் காலத்து பழமைவாய்ந்தபெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேரான தேரோட்டம் விமர்சையாக நடைபெறும் திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இக்கோவிலுக்கு வருகின்றனர்.

    கோவில் பராமரிப்பு பணிகள் சரிவர நடைபெறவதில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இக்கோவில் வளாகத்தில் நட்சத்திர நந்தவன பூங்கா உள்ளது. இந்த பூங்கா சில வருடங்களுக்கு முன்பு தனியார் ஒருவரால் பக்தர்கள் வசதிக்காக ஒன்பது நட்சத்திர மரங்கள் வளர்க்கப்பட்டு, நடைபாதை, குழந்தைகள் விளையாட உபகரணங்கள் எனபல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் செய்து வைத்தார். தொடர்ந்து பராமரிப்பு பணகள் செய்யாமல் நாளடைவில் பூங்கா முழுவதும் செடி, கொடிகள் அடர்ந்துபுதர்மண்டி பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் அங்கு செல்வதில்லை. எனவே அதனை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

    • 16 மாணவிகள் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தனர்.
    • பரதநாட்டியத்தில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு பல்கலை தேர்வு நடத்தப்பட்டு பட்டம் வழங்கப்படுகிறது என்றார்.

    அவிநாசி  :

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் கலையரங்கத்தில் சதங்கையணி பூஜை நடைபெற்றது.இதில், 16 மாணவிகள் பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்தனர்.

    ஆசிரியை தேவிகா கூறுகையில், ஆண்டுதோறும் பரதநாட்டியத்தில் சான்றிதழ், பட்டய, மற்றும் பட்டப் மேற்படிப்புகளுக்கு பாடங்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, பல்கலை தேர்வு நடத்தப்பட்டு பட்டம் வழங்கப்படுகிறது என்றார்.விழாவில் பரதநாட்டிய மாணவிகள் மற்றும் பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    ×