search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avoidance"

    • கர்ப்பகாலத்தில் ப்ரீக்ளாம்சியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    • உணவு முறையில் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

    கர்ப்ப கால மன அழுத்தம் என்பது, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாகலாம். இதில் கவலை அல்லது மன அழுத்தமும் ஒன்று. இது சாதாரணமானது.

    பொதுவான காரணங்கள்:

    * கர்ப்ப இழப்பு

    * கர்ப்பம் குறித்த பயம்

    * பிரசவ பயம்

    * குமட்டல்

    * சோர்வு

    * மனநிலை மாற்றங்கள்

    * தாங்கமுடியாத முதுகுவலி

    * குழந்தையை நல்லபடியாக வளர்க்க முடியுமா என்னும் பயம் போன்றவை பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது.

    கர்ப்பகாலத்தில் மன அழுத்தம் உடலில் தலைவலி, தூங்குவதில் சிக்கல் அல்லது அதிகப்படியான உணவை எடுத்துகொள்ளும் நிலையை உண்டாக்க கூடும். இது வயிற்றில் வளரும் குழந்தையை பாதிக்கும். இதனால் ப்ரீக்ளாம்சியா அதுகுறித்த பயம் இன்னும் மன அழுத்தத்தை உண்டாக்கும். குறிப்பாக கர்ப்பிணிக்கு ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் இருந்தால், கர்ப்பகாலத்தில் ப்ரீக்ளாம்சியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    கர்ப்பிணி பெண்களை குடும்பத்தில் இருப்பவர்களும் நட்பு வட்டமும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அதை ஏற்றுகொள்ளும் விதமாக கர்ப்பிணி பெண்களும் ஒத்துழைக்க வேண்டும். உணவு முறையில் சீரான சத்தான உணவுகளை எடுத்துகொள்ளுங்கள். கர்ப்ப காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். இது குறித்து டயட்டீஷியனிடம் ஆலோசனை மேற்கொள்ளலாம்.

    நாவிற்கு சுவை அளிக்கும் ஜங்க் ஃபுட் உணவுகளை தவிருங்கள். கார்பனேட்டட் பானங்கள் தவிர்த்து பழச்சாறுகள், திரவங்கள் அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும். உணவை பகுதி பகுதியாக பிரித்து உண்ணுங்கள். உடலை சுகாதாரமாக வைத்துகொள்ளுங்கள். தினமும் இரண்டு வேளை வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.

    மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள். புத்தகம் படியுங்கள். துணையுடன் நேரம் செலவிடுங்கள். வயிற்றில் குழந்தையுடன் பேசுங்கள். வேகமான உடற்பயிற்சி இல்லாவிட்டாலும் மிதமான நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். யோகா, தியானம் போன்றவை மன அழுத்தத்தை குறைக்க கூடுதலான பலன் அளிக்கும்.

    ×