என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » b s yeddyurappa
நீங்கள் தேடியது "B S Yeddyurappa"
கர்நாடக மாநில முதல்வராக வேண்டும் என்ற பேராசை இல்லை, ஆனால் அடுத்த தேர்தலில் பார்க்கலாம் என சித்தராமையா தெரிவித்துள்ளார். #Siddaramaiah #congress
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. ஆனால் மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 2-வது இடமே பிடித்தது. பா.ஜனதாவிற்கு அதிக தொகுதிகள் கிடைத்த போதிலும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. நீண்ட இழுபறிக்குப்பின் குமாரசாமி ஆட்சியமைத்தார்.
இந்நிலையில் தனக்கு மீண்டும் முதல்வராகும் பேராசை இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா கூறுகையில் ‘‘நான் முதல்வராக போகிறேன் என்ற எடியூரப்பா கூறுவது போல் நான் எங்கேயாவது அப்படி கூறினேனா?. அது போன்ற கேள்விகள் எழும்ப வேண்டியதில்லை. அடுத்த தேர்தலில் மக்கள் ஆதரவு அளித்தால், அப்போது பார்க்கலாம்.
முதலமைச்சராக பதவி வகிக்கும் வாய்ப்பு எனக்கு ஐந்து வருடங்கள் கிடைத்தது. நாங்கள் திறமையான அரசை நடத்தி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. முதல்வராக வேண்டும் என்ற பேராசை எனக்கில்லை’’ என்றார். #Siddaramaiah #congress
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சுதந்திரமே இல்லாமல் சொகுசு விடுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கவலை தெரிவித்துள்ளார். #BSYeddyurappa #JDS #Congress
பெங்களூரு:
கர்நாடகாவில் பெரும்பான்மை பெறாத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் வாஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக இன்று பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.
கர்நாடக முதல்வராக பதவியேற்ற பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பேசிய எடியூரப்பா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சுதந்திரமே இல்லாமல் சொகுசு விடுதிகளில் கடுமையான சூழலில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார்.
மேலும், அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் செல்போன்கள் பிடுங்கி வைக்கப்பட்டுள்ளது அதனால் அவர்களின் குடும்பத்தினரிடம் கூட பேச முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். இது போன்ற முயற்சிகளின் மூலம் பாஜக பெரும்பான்மை பெறுவதை தடுக்க முடியாது. அடுத்த 15 நாட்களுக்குள் கவர்னர் கூறியது போலவே பாஜக பெரும்பான்மை நிச்சயம் நிரூபிக்கும் என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். #BSYeddyurappa #JDS #Congress
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X