search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bamboo Pits"

    • குழிகளில் மூங்கில் கம்புகளை கரையான் அரிக்காமல் இருக்க ஆற்று மணல் போட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல் தெரியவருகிறது.
    • மற்றொரு குழியில் 2 பானை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

    திருப்புவனம்:

    மதுரை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக 2 குழிகள் தோண்டப்பட்டு பணி நடைபெறுகிறது. ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து தோண்டியபோது, ஒரு குழியில் 2 பெரிய பானைகளின் முகப்புகள் தென்பட்டன. அதன் அருகே பழங்கால தமிழர்கள் மூங்கில் கம்பு ஊன்றி கொட்டகை போட்டு வாழ்ந்ததாகவும், அந்த காலத்திலேயே குழிகளில் மூங்கில் கம்புகளை கரையான் அரிக்காமல் இருக்க ஆற்று மணல் போட்டுள்ளதாகவும் ஆச்சரியப்படத்தக்க தகவல் தெரியவருகிறது.

    தற்சமயம் மணல் அள்ளி அந்த குழிகளையும் கண்டுபிடித்து உள்ளனர். தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில் மற்றொரு குழியிலும் 2 பானை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒரு பானை வடிவம் அரை வட்ட வடிவில் நன்றாகவும், மற்றொரு பானை சிதிலமடைந்த நிலையிலும் காணப்படுகிறது. அதே குழியில் பண்டைய தமிழர்களின் மூங்கில் மரம் ஊன்றி கொட்டகை போட்டு வசித்ததற்கான குழிகள் நிறைய உள்ளன. தற்போது கீழடியில் 3-வது குழியும் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கக்கூடும் எனவும் கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தெரிவித்தனர்.

    ×