search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bansuri Swaraj"

    • பன்சூரி சுவராஜுக்கு பா.ஜனதா சீட் வழங்கியதற்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
    • மணிப்பூர் தொடர்பான வழக்கில் ஆஜரான பன்சூரி, பெண்களிடம் வாக்கு கேட்க வர இருப்பதாக விமர்சனம்.

    மறைந்த முன்னாள் மத்திய மந்திரி சுஸ்மா சுவராஜ். இவரது மகளான பன்சூரி சுவராஜ் பா.ஜனதா சார்பில் டெல்லி தொகுதியில் போட்டியிட இருக்கிறார். இவருக்கு டெல்லியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்கு ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்தது.

    லலித் மோடி பாஸ்போர்ட் தொடர்பான வழக்கில் அவருக்கு ஆதரவாகவும், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் தற்போது பெண்களிடம் வாக்கு கேட்க வர இருக்கிறார். மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜனதா அவரை திரும்பப்பெற வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்திருந்தது. அதற்கு பன்சூரி சுவராஜ் தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

    இந்த நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பு என்ற பெயரில் ஏமாற்றுகிறது. அவர்கள்தான் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக பன்சூரி சுவராஜ் கூறுகையில் "பெண்களின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆம் ஆத்மி ஏமாற்றுகிறது. அவர்களுடைய கட்சி தலைவர்கள் பெண்களுக்கு எதிராக மோசமான குற்றச்செயலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தற்போது மற்றொரு மோசமான நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    அக்கட்சி தொண்டரின் 14 வயது மகளுக்கு ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. அந்த தலைவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் எப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இப்படி இருக்கும்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கேபினெட் மந்திரிகள் இதுபோன்ற பிரச்சனைக்கு எதிராக ஏன் பேசமாட்டோம் என்கிறார்கள்?. குற்றச்சாட்டில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவரை சஸ்பெண்ட் செய்ய பா.ஜனதா வலியுறுத்தியது.

    டெல்லி பெண்கள் ஆணையம் சட்த்தின் சட்டப்பிரிவு 10-ன் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், டெல்லி பெண்கள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் டெல்லி பெண்கள் ஆணையம் எதையும் செய்யவில்லை" என்றார்.

    • தேசவிரோத சக்திகளை பாதுகாக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகியதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு.
    • நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்.

    மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த சனிக்கிழமை பா.ஜனதா வெளியிட்டுள்ளது. அதில் நியூடெல்லி தொகுதியில் மறைந்த முன்னாள் மத்திய மந்திரியான சுஸ்மா சுவராஜ் மகள் பன்சூரி சுவராஜ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மக்களவை தேர்தலில் போட்டியிட பன்சூரி சுவராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், பா.ஜனதா அவரது பெயரை திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

    தேசவிரோத சக்திகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பன்சூரி சுவராஜ் ஆஜரானார். இதனால் நாட்டு மக்களிடையே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய லலித் மோடிக்கு ஆதரவாக பாஸ்போர்ட் வழக்கில் ஆஜரானார். மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானார் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பான ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில நிதியமைச்சர் அதிஷி "இன்று பன்சூரி சுவராஜ் நியூடெல்லி மக்களவை தொகுதியில் பெண்களிடம் சென்று வாக்கு கேட்க இருக்கிறார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

    இதற்கு பதிலடியாக பன்சூரி சுவராஜ் கூறுகையில் "ராஜேந்திர நகரில் நீங்கள் வேட்பாளராக நிறுத்தியவர், சொந்த கட்சியினரால் அடித்து விரட்டப்பட்டது ஏன்? என்பதை ஆம் ஆத்மி கட்சியிடம் கேட்க விரும்புகிறேன். அவர்களால் நிறுத்தப்பட்ட வேட்பாளரை சொந்த கட்சி உறுப்பினர்கள் கூட விரும்பவில்லை.

    இந்த நிலையில் அவர்கள் என்மீது குற்றச்சாட்டுகளை வைக்க முடியும். ஆனால், மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

    டெல்லியில் கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய மந்திரி ஹர்ஷ் வர்தன் அரசியலில் இருந்து விலகியுள்ளார். ஹர்ஷ் வர்தன் அரசியலில் இருந்து விலகியது தொடர்பாகவும் பா.ஜனதாவை ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.

    ×