என் மலர்
நீங்கள் தேடியது "Beauty marks"
- உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு.
- தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது.
இந்த காலத்தில் ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை பேசியல் செய்து கொள்கிறார்கள். பல ரசாயன பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய அந்த பேசியலால் முகத்திற்கு மேலும் பாதிப்புகள் அதிகரிக்குமே தவிர எந்தவித நன்மையும் ஏற்படாது. இவ்வாறு செய்வதற்கு பதிலாக நாமே நம் வீட்டில் இயற்கையான முறையில் எப்படி பேசியல் செய்வது என்று இந்த அழகு குறிப்பு பகுதியில் பார்ப்போம்.
கரும்புள்ளிகள் நீங்க
5-6 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து பின் ஆவிப்பிடித்து ஈரமான துணியால் தேய்த்தால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும். இரவில் தூங்க செல்வதற்கு முன் முகத்தை கழுவி தேங்காய் பாலில் நனைத்த பருத்தி துணியால் துடைக்கவும், காலையில் நீரில் கழுவவும், இது கருப்பு புள்ளிகளை அகற்றும். தேங்காய் பால், தேன் மற்றும் இரண்டு சொட்டு பாதாம் எண்ணெயையும் சேர்க்கவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10 முதல் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இது சருமட்தை ஈரப்பதமாக்குகிறது.
வறண்ட சருமம் பளபளக்க...
உடல் வறட்சியை போக்குவதில் எள்ளுக்கு முக்கிய பங்கு உண்டு. 2 ஸ்பூன் எள்ளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் பயத்தமாவு கலந்து முகத்தில் பூசிவர முகச்சுருக்கம் மறைந்துவிடும். முகக்கருமை நீங்க சர்க்கரை, கற்றாழை ஜெல், பால் சேர்த்து ஒன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும். இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழித்து ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
முகத்தில் உள்ள தழும்புகள் மறைய
தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்து 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவ சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.
- பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப்.
நமது சருமம் தான், நமது சிறந்த நண்பன், கருப்போ, சிவப்போ இல்லை மாநிறமோ, நம் சருமத்தை முதலில் நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கருமை இல்லாத சருமத்தை யார்தான் விரும்பவில்லை?
வேப்பிலை ஃபேஷியல் முகத்திற்கு அழகு கூட்டுவது மட்டுமல்லாமல் முகத்தில் உள்ள கிருமிகளையும், கரும்புள்ளிகளையும், முகப்பருக்களையும் நீக்குவதற்கு பயன்படுகிறது. அதை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். பேசியல் செய்வதற்கு முதலில் பேஸ் டீம் செய்வார்கள். இதற்கு நாம் உபயோகிக்கக்கூடிய பொருள்தான்
எலுமிச்சம் பழத்தோலை கேரட் உரசுவது போல் உரசி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒருஅகலமான பாத்திரத்தில் போட்டு அதில் 300 மில்லி அளவு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு அதை நன்றாக கலக்கி, அதில் வரும் ஆவியில் நம்முடைய முகத்தை ஐந்து நிமிடம் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் எலுமிச்சை பல தோளில் இருக்கக்கூடிய கிருமி நாசினி ஆனது நம் முகத்தில் இருக்கக்கூடிய துவாரங்களை திறந்து அதில் இருக்கும் கிருமிகளையும், அழுக்குகளையும் நீக்க உதவுகிறது.
அடுத்ததாக செய்யக் கூடியதுதான் பேஸ் ஸ்க்ரப். இதற்கு நாம் முதலில் ஒரு சோற்றுக்கற்றாழையை எடுத்து சுத்தம் செய்து அதில் இருக்கும் சதைப்பகுதியை மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு பவுலை எடுத்து அதில் 2 ஸ்பூன் அளவு அரிசி மாவை சேர்க்க வேண்டும். மேலும் அதனுடன் அரை எலுமிச்சம் பழச்சாறை சேர்க்க வேண்டும். பிறகு தேவையான அளவு சோற்றுக்கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, முகத்தை ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான இறந்த செல்களும் நீக்கப்படும். கடைசியாக நாம் செய்யப்போவது தான் ஃபேஸ் பேக்.
இந்த ஃபேஸ் பேக்கிற்கு நமக்கு வேப்பிலை பொடி தேவைப்படும். ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் வேப்பிலை பொடியை போட்டு, அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் கற்றாழை ஜூசை ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாக தடவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக் நன்றாக காய்ந்த பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் நம் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கிருமிகளும் நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் அகன்று, முகம் பொலிவுடன் காணப்படும். எளிதாக கிடைக்கக்கூடிய இந்த இயற்கையான பொருட்களை வைத்து எந்தவித செலவு செய்யாமல் வீட்டிலேயே பேஷியல் செய்து பயனடைவோம்.
- கரும்புள்ளிகள் அல்லது தழும்புகள் இருப்பது முக அழகையே கெடுத்து விடும்.
- ஆண், பெண் இருவரும் முக அழகை பராமரிக்க அதிகமாகவே முயற்சி செய்வார்கள்.
ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் தங்களை அழகாக காட்டுவதில் அதிக முக்கியத்துவம் காட்டுவார்கள். அதிலும் தங்களின் முக அழகை பராமரிக்க அதிகமாகவே முயற்சி செய்வார்கள்.
முகம் என்னதான் அழகாக இருந்தாலும் முகத்தில் கரும்புள்ளிகள் அல்லது தழும்புகள் இருப்பது முக அழகையே கெடுத்து விடும்.

ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவைகளால் ஏற்படும். இவற்றை எளிமையான சில இயற்கை வழிகளின் மூலம் போக்க முடியும்.

* கற்றாழை ஜெல்லை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வர, முகத்தில் உள்ள கருமை படிப்படியாக முற்றிலும் அகலும்.
* முட்டையின் வெள்ளைக்கருவுடன் தயிரை சேர்த்து நன்கு அடித்து, அவற்றை முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் இருக்கும் கருமை நீங்கும்.
* வெந்தயக் கீரையை அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடியோ அல்லது வாரம் 3 முதல் 4 முறையோ செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும்.

* எலுமிச்சை சாற்றினை 1/2 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
* வெங்காயம் மற்றும் பூண்டை சரிசமமாக எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ, முகத்தில் இருக்கும் கருமையான தழும்புகள் மற்றும் புள்ளிகள் மறையும்.