search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bhairava manthira jebam"

    • மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும்.
    • அன்னதானம் செய்யும் நேரத்தை மட்டும் ஓய்வாக எடுத்துக்கொள்ளவும்.

    ஆடி அமாவாசையை இந்துக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். நம்மில் பலருடைய முன்னோர்கள் (இறந்துபோன நமது தாத்தா, பாட்டி= சிலருக்கு அம்மா, அப்பா) இந்த நாளில் நம்முடைய கடமையைச் செய்கிறோமா? என்பதை விண்ணில் இருந்து கவனித்துக்கொண்டிருப்பார்கள். கலியுகமான நாம் வாழும் யுகத்தில் மட்டுமே அவர்கள் அவ்வாறு கவனிப்பதை நம்மால் நேரடியாகப்பார்க்க முடியாது. ஆனால், உணர முடியும்.

    நமது அம்மாவின் அப்பா, அம்மா மற்றும் அப்பாவின் அம்மா, அப்பாக்களின் அல்லது தாத்தாக்கள், பாட்டிகளின் நினைவு நாட்களை திதியின் அடிப்படையில் நினைவிற்கொண்டு, அந்த தமிழ் மாதத்தில் அந்த திதி வளர்பிறைதிதியா? அல்லது தேய்பிறைத் திதியா? என்பதை ஆஸ்தான ஜோதிடர் மூலம் அறிந்து பழமையான சிவாலயங்களுக்குச் சென்று அன்னதானம் செய்ய வேண்டும்.

    இது நான்கு யுகங்களாக நமது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. காலப்போக்கில், நமது முன்னோர்கள் இறந்த நாட்களை மறந்து விடுவதால் மொத்தமாக முன்னோர்களுக்கு அன்னதானம் செய்ய மூன்று முக்கிய நாட்களை நமது முன்னோர்கள் சிவபெருமானின் ஆசியோடு தேர்ந்தெடுத்துள்ளனர். அவைகள்:- ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவசை.

    ஒவ்வொரு ஆடி அமாவாசையன்றும் வடபாரதத்தில் காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் நதிக்கரையோர சிவாலயங்கள் முழுவதும் அதிகாலையில் நீராடி அன்னதானம் செய்வது வழக்கம். தென்பாரதத்தில் ராமேஸ்வரம், காவிரிக்கரையோரம், சதுரகிரி, அண்ணாமலை மற்றும் ஏராளமான சிவாலயங்களில் கடலில் அல்லது நதியில் அல்லது வீட்டில் நீராடி சிவனை வழிபட்டு அன்னதானம் செய்வது வழக்கம் ஆகும்.

    ஆன்மீகக்கடல் வாசக, வாசகிகளான நாம் செய்ய வேண்டியது என்ன?

    வீட்டில் அல்லது பழைமையான சிவாலயத்தில் இருக்கும் கடல் அல்லது நதி அல்லது சுனையில் நீராட வேண்டும். சிவாலயம் அல்லது நமது வீட்டில் தனியறையில் பின்வரும் மந்திரத்தை குறைந்தது 1 மணி நேரம் அதிகபட்சமாக 12 மணி நேரம் ஜபிக்க வேண்டும். (ஒரு மணி நேரத்துக்கு 10 நிமிடம் இடைவெளிவிட்டுக் கொள்வது நல்லது).

    சிவாலயம் எனில், அங்கே இருக்கும் கால பைரவர் அல்லது சொர்ண பைரவர் சன்னதியில் மஞ்சள் துண்டு விரித்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். பின்வரும் மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும். முதலில் ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும், அடுத்து ஓம் (உங்கள் இஷ்டதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும், அடுத்து ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறையும் ஜபித்துவிட்டு ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று குறைந்தது ஒரு மணிநேரம் வரையிலும், அதிகபட்சம் 5 அல்லது 12 மணி நேரம் வரையிலும் ஜபிக்கவும்.

    ஒரு மணி நேரம் வரை ஜபித்ததும், அருகில் இருக்கும் உணவகத்துக்குச் சென்று குறைந்தது 3 அதிகபட்சம் 27 காலை உணவுப்பொட்டலங்களை வாங்கி கோவில் வாசலில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்யவும். காலை அன்னதானத்தை காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள்ளும், மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள்ளும், இரவு 7 மணி முதல் 9 மணிக்குள்ளும் இவ்வாறு ஒவ்வொரு முறையும் அன்னதானம் செய்யவும்.

    இந்த அன்னதானம் செய்யும் நேரத்தை மட்டும் ஓய்வாக எடுத்துக்கொள்ளவும். மீதி நேரங்களில் கால பைரவர் அல்லது ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அமர்ந்து கொண்டு, ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஜபித்துக்கொண்டே இருக்கவும். ஜபித்து முடித்ததும் ஒரு இளநீர் அருந்தவும். இந்த வழிமுறையை தமிழ்நாட்டுக்குள் இருப்பவர்கள் பின்பற்றலாம்.

    வீடு எனில், வீட்டில் தெற்குபக்கச் சுவரில் மஞ்சளில் ஒரு சூலாயுதம் வரையவும். அந்த சூலாயுதத்தின் மீது குங்குமத்தால் மீண்டும் ஒரு சூலாயுதம் வரையவும். இது பைரவரின் சின்னம் ஆகும். மேலே கூறியது போல மந்திரங்களை அந்த சூலாயுதத்தைப் பார்த்தவாறு ஜபிக்கவும். அருகில் இருக்கும் அனாதை இல்லம் அல்லது சிவாலயம் அல்லது ஆதரவின்றி வாழ்ந்து வரும் முதியவர்கள் இவர்களில் யாருக்காவது அன்னதானம் (வீட்டில் சமைத்தது) செய்ய வேண்டும். இந்த முறையை வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் பின்பற்றலாம்.

    இந்த நாள் முழுக்க யாரையும் திட்டக் கூடாது; காம ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது; பொறாமைப்படக்கூடாது.

    ×