search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharatiya Masdhur Association"

    • கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன.
    • மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும்.

    பல்லடம் :

    கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பாரதீய மஸ்தூர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து அதன் கோவை மண்டல பொது செயலாளர் நடராஜன் கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறிகள் உள்ளன. பாரம்பரியமாக நெசவு செய்து வரும் பல ஆயிரம் குடும்பங்களுக்கு இத்தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.குறைந்த கூலி வருவாயை கொண்டு குடும்பம் நடத்தி வரும் நெசவாளர்களின் நலன் கருதி மகாத்மா காந்தி பங்கர் பீமா யோஜனா காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தியது.

    இத்திட்டத்தில் உறுப்பினர் இயற்கை மரணமடைந்தால் குடும்பத்தினருக்கு 60 ஆயிரம் ரூபாய், விபத்து மரணம், அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் 1.50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும். மத்திய அரசின் இத்திட்டத்தின் மூலம் எண்ணற்ற கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறும்.ஆனால் 4 ஆண்டாக இத்திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இத்திட்டத்தில் இணைந்த நெசவாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு உரிய காப்பீடு கிடைப்பதில்லை. இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம், முத்ரா கடனுக்கு மானியம் வழங்காதது, கூட்டுறவு சங்கங்களில் சேலை உற்பத்தி செய்த உறுப்பினர்களின் கணக்கிலேயே, மானிய தொகையை வரவு வைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×