என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bharatiya Mastur Sangam"
- சமூக பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் உரிய பாதுகாப்பை அமல்படுத்த வேண்டும்.
- ஒப்பந்தத் தொழிலாளா்களின் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.
திருப்பூர் :
தமிழகத்தில் நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் பிஎம்எஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிரபு தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:- அனைவருக்கும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின்கீழ் உரிய பாதுகாப்பை அமல்படுத்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளா்களின் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். தொழிலாளா்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் தேசிய தொழிலாளா் கொள்கையை உருவாக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிப்பதற்குப் பதிலாக வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளை பூா்த்தி செய்யும் அளவுக்கு ஊதியத்தை நிா்ணயிக்க வேண்டும் என்றனா்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், பிஎம்எஸ் செயற்குழு உறுப்பினா் சிதம்பரசுவாமி, மாவட்டச் செயலாளா் மாதவன், பனியன் சங்க செயலாளா் ஆறுமுகம், மோட்டார் சங்க மாவட்டத் தலைவா் தண்டபானி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொழிலாளர்க ளுக்கு எதிரானது.
- கம்யூனிஸ்ட்கள் ஆளும் கட்சியுடன் சேர்ந்து நாடகம் நடத்துகின்றனர்.
திருப்பூர் :
பாரதிய மஸ்தூர் சங்கத்தின்தென்பாரத அமைப்பு செயலாளர் எஸ். துரைராஜ் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 2023 ஏப்ரல் 21 ந் தேதி அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொழி லாளர்க ளுக்கு எதிரானது. இத்திருத்த த்திற்காகவெளி நடப்பு செய்த எதிர்க் கட்சிக ளின்நடவடிக்கை வெறும் நாடகம் மட்டும்தான். தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 65 A-ல் திருத்தம்கா ரணமாக 12 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். எந்த வொரு தொழி ற்சாலை அல்லது நிறு வனம் விரும்பி னால் இதை நடைமுறை படுத்த முடியும் .12 மணி நேரம் வேலை செய்ய சொன்னால் தொழிலா ளர்களால் மறுக்க இயலாது. அதிலும் குறிப்பாக பெரும்பான்மை யான வர்கள் ஒப்பந்த அடிப்ப டையில் தான் நியமிக்கப்ப ட்டுள்ள நிலை யில்தொழி லாளர்கள் விரும்பி னால் மட்டுமே என்பதெல்லாம் வெறும் வா ர்த்தைஜாலம் மட்டுமே. எனவே இதை பாரதிய மஸ்தூர் சங்கம்கடு மையாக எதிர்க்கிறது. இச்சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும் என பாரதிய மஸ்தூர் சங்கம் வலியு றுத்து கிறது.இது ஒரு புறமிருக்க இச்சட்ட திருத்தத்திற்கு எதிராக வெளி நடப்பு செய்த கம்யூனிஸ்டுகள் ஆட்சிபுரியும் கேரள மாநில த்தில் பல துறைகளில் 12 மணி நேர வேலை நடைமுறை படுத்தப்ப ட்டுள்ளது. தனியார் மயம், தாராளமயம், உலக மயம், ஆகிய கொள்கை களை எதிர்ப்ப தாககூறும் கம்யுனி ஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் ஆளும், ஆண்ட மாநிலங்க ளில் நடைமுறைப் படுத்தி யுள்ளனர். காங்கிரஸ்க ட்சியும் அதற்கு துணை போகிறது.
இந்நிலையில் கம்யூனிஸ்ட்கள் ஆளும் கட்சியுடன் சேர்ந்து நாட கம்நடத்துகின்றனர்.அல்லது பொது மக்களை ஏமாற்று கின்றனர்.கூடவே பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும்அனைத்து மாநிலங்க ளிலும் இச்சட்டம் அமலாகியுள்ளதுஎன்பது அப்பட்டமான பொய் என்பது மட்டுமல்ல மக்களைஏமாற்றும் கீழ்த்தரமான அரசியல் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்