என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bihar engineer
நீங்கள் தேடியது "Bihar engineer"
பீகார் மாநிலத்தில் கட்டாய திருமணத்துக்காக என்ஜினீயர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் பிடாபூர் மாவட்டம் வைசாலி பகுதியை சேர்ந்தவர் சரண்.
என்ஜினீயரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா குமாரிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர்.
இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியங்கா குமாரியை திருமணம் செய்ய சரண் மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரியங்காவின் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வதற்காக சரணை கடத்தினர். சரணும், அவரது நண்பர் சவுரவ்சும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது பிரியங்காவின் உறவினர் துப்பாக்கி முனையில் அவரை காரில் கடத்தி சென்றனர். 12 முதல் 15 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.
சரண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவரது தாயார் வீனா தேவி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி சரணை மீட்டனர். கடத்தல் தொடர்பாக பிரியங்கா தந்தை அரவிந்த்ராய் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

×

X