search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "buckingham palace"

    • 75 வயதான சார்லஸ் சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
    • இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் சார்லஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முறைப்படி மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    75 வயதான சார்லஸ் சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற இந்திய மக்களுடன் இணைந்து தாமும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

    • மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது.
    • சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுவெளி நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரை.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்படுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த மாதம் மூன்று நாட்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மன்னர் சார்லஸ்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதால், பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார்.

    ஊகங்களைத் தடுக்கவும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அறிவித்துள்ளார்" என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் (கோப்புப்படம்)

    75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக முடிசூடிக் கொண்டார். இரண்டாம் எலிசபெத் ராணி, 2022-ல் உயிரிழந்ததை அடுத்து மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். மன்னர் சார்லஸ்க்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஹாரி குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் விபத்தை ஏற்படுத்தியதால், தனது டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்துள்ளார். #PrincePhilip
    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
     
    இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயம் அடைந்தார்.



    மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, இளவரசர் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறினார். இதற்கிடையே, விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரி கடிதம் எழுதினார். 

    இந்நிலையில், இளவரசர் பிலிப் நேற்று தனது டிரைவிங் லைசென்சை காவல் நிலையத்தில் திருப்பி அளித்துள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மணை தெரிவித்துள்ளது. #PrincePhilip
    ×