என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "calcium-rich foods"
- வைட்டமின் டி சரியான அளவில் இருந்தால் தான் கால்சியம் உடம்பில் சேரும்.
- கொள்ளில் சோயாவுக்கு இணையான கால்சியம் உள்ளது.
உறுதியான, வலுவான எலும்புகள் தான் ஆரோக்கியமான வாழ்வினை தரும். பால், தயிர், பால் பொருட்கள், பீட்ருட், எள், முட்டைக்கோஸ், புரோக்கோலி, திராட்சை, மாதுளை, முட்டை, மீன், கோழி, காடை, இறைச்சி வகைகள், வெந்தயக்கீரை, முருங்கைக் கீரை, பாலக்கீரை, கொத்தமல்லி தழை, சோயாபீன், பிரண்டை தண்டு, எலும்பொட்டி கீரை, அத்திப்பழம், பேரிட்சை, கேழ்வரகு, கம்பு, கருப்பு உளுந்து, முந்திரி, பாதாம், பிஸ்தா இவை அனைத்தும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் ஆகும். இவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் அதிகாலை வெயில் அல்லது மாலை இளவெயிலில் சிறிது நேரம் நடக்கலாம். இது உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்க உதவும்.
வைட்டமின் டி சரியான அளவில் இருந்தால் தான் கால்சியம் உடம்பில் சேரும்.
பால் சார்ந்த பொருட்கள் மற்றும் பால் சாப்பிடுவதில் ஒவ்வாமை உள்ளவர்கள் சோயா பால், பீன்ஸ், பாதாம் பால், சாப்பிட்டு வந்தால் தினசரி தேவையான ஒரு கிராம் கால்சியம் நம் உடலுக்கு கிடைத்துவிடும்.
கொள்ளில் சோயாவுக்கு இணையான கால்சியம் உள்ளது. எலும்பு உறுதிக்கு கொள்ளு ரசம் மிகவும் நன்று. எலும்பை உறுதிப்படுத்தி தேவையற்ற கொழுப்பு சதையை குறைக்கும். கொள்ளு 10 கிராம், மிளகு, சீரகம் கொத்தமல்லி, பூண்டு, புளி அல்லது தக்காளி தேவையான அளவு எடுத்து ரசமாக வைத்து குடிக்கவும்.
ஒருகிராம் குங்குமப்பூவை 100 மிலி தேங்காய் எண்ணெயில் நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி அதை இரண்டு துளி உட்கொண்டு உடம்பில் தேய்த்தும் மாலை இளவெயிலை நடைபயிற்சி செய்து வந்தால் வைட்டமின் டி உடலில் எளிதில் உட்கிரகிக்கப்படும்.
எலும்பொட்டிக்கீரை என்பது ஒரு வகை கொடி வகை தாவரம். இந்த செடியின் இலையை பாலுடன் நன்கு அரைத்து காலை, மாலை இருவேளையும் ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து உணவுக்கு முன்போ அல்லது பின்போ சாப்பிட வேண்டும்.
பிரண்டைத் தண்டில் ஏராளமான கால்சியம், பாஸ்பரஸ் படிம வடிவில் உள்ளதால் இதை புளி சேர்த்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் தொண்டை காறல் ஏற்படும். ஆகவே பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, புளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும்.
சித்த மருத்துவம்
பவள பற்பம், முத்துப் பற்பம், முத்துச்சிப்பி, பற்பம், சங்கு பற்பம், பகரை பற்பம், நத்தை பற்பம் போன்றவை எலும்பு சார்ந்த பிணிகளுக்கு நல்ல பலனை தரும். இவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனை படி எடுத்துக்கொள்ளலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்