search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cause of ringworm"

    • கவலை கண்களை குளமாக்குமே தவிர கருமையை குணமாக்காது.
    • வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையத்துக்கு மேல் தடவி வரலாம்.

    கண்களைச் சுற்றி கருவளையங்கள் யாருக்கும், எந்த வயதிலும் வரலாம். இதற்கு காரணம், வயது முதிர்வு, பரம்பரை, சில பொருட்களுக்கு ஒவ்வாமை, சரியான தூக்கமின்மை, சருமத்தில் மெலனின் அதிகமாக இருப்பது, ரத்தசோகை, சிகரெட், மது பழக்கம், மன உளைச்சல், அடிக்கடி ஹேர்டை பயன்படுத்துவது போன்றவற்றால் கருவளையம் ஏற்படும்.

    இரண்டு கண்களுக்கும் கீழ் கருமை வந்தால் பயப்படத் தேவையில்லை. சில வீட்டு வைத்தியங்களை செய்து பாருங்கள். அவை பலன் அளிக்காவிட்டால் சரும நோய் சிகிச்சை நிபுணரை சந்தியுங்கள். ஆனால் ஒரு கண்ணுக்கு கீழே மட்டும் கருமை வந்தால் உடனடியாக சரும நோய் சிகிச்சை நிபுணரை சந்தித்து சிகிச்சையை ஆரம்பித்துவிடுங்கள்.

    கருமையைப் போக்க சில வழிமுறைகள்:

    1) கண்களில் கருமை நிறமிருக்கும் இடங்களில் குளிர்ந்த நீரில் நனைத்த துணியை ஒற்றி எடுங்கள் 2) தூங்கும்போது தலையை சற்று தூக்கி வைத்துப்படுங்கள். இதனால் கண்ணின் கீழ் இமை வீங்குவது குறையும்

    3) போதுமான நேரம் நன்றாகத் தூங்குங்கள்

    4) மது, சிகரெட் பழக்கத்தை நிறுத்தவும்

    5) சூரிய ஒளியில் வேலை பார்க்கும்போது புற ஊதாக்கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கறுப்பு கண்ணாடி, தொப்பி அணிந்து கொள்ளுங்கள். குளுமையை உண்டாக்கும் கிரீம்களைத் தடவிக் கொள்ளுங்கள்

    6) வெள்ளரிக்காய் துண்டுகளை கருவளையத்துக்கு மேலே தடவி ஒத்தடம் இடுங்கள்

    7) ஆரோக்கியமான, சத்தான உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

    கவலை கண்களை குளமாக்குமே தவிர கருமையை குணமாக்காது. எனவே கவலைப்படாதீர்கள். வீட்டு வைத்தியம் பலன் தராவிட்டால் உடனே சருமநோய் சிகிச்சை நிபுணரை சந்திப்பது சிறந்தது.

    ×