search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "celebrities"

    • திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
    • திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

    இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், அவரது காதலியும், வைர வியாபாரியின் மகளுமான ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் முடிவானது.

    இவர்களது திருமணம் வரும் ஜூலை 12-ம் தேதி மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் 3 நாள் நடைபெறவுள்ளது.

    திருமணத்திற்கு முன்னதாக ஐரோப்பாவில் சொகுசு கப்பலில் பிரமாண்ட விழா ஒன்று நடந்தது.

    ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இன்று சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

    ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டருக்கு ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்டும் வருகை தந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

    இதேபோல், கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், நடிரை நேஹா சர்மா, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி தாக்கரே அவரது மகன் தேஜன் தாக்கரேவுடன் கலந்துக் கொண்டார்.

    • பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
    • நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் பிரசார களத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் பங்கேற்க இருக்கும் பட்டியல் மற்றும் பிரசாரம் செய்யும் இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகர், பெஞ்சமின், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் உள்பட பல நடிகர்கள் பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் சிங்கமுத்து, வையாபுரி, விந்தியா, நாஞ்சில் அன்பழகன், கவுதமி, காயத்ரி ரகுராம், அனுமோகன், பபிதா, ஜெயமணி ஆகியோர் பிராசரம் செய்ய தயாராக இருக்கின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    பிரசாரம் பற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, கட்சி சார்பில் பிரசாரம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான பின்தான் யார்-யார் எங்கு பிரசாரம் செய்ய உள்ளார்கள் என்ற விபரம் தெரியவரும். தேர்தல் அறிக்கை மற்றும் பல்வேறு விசயங்கள் மற்றும் விமர்சனங்கள் தேர்தல் பிரசார களத்தில் பேச இருக்கிறோம்.

    கட்சியின் அறிவிப்பு வெளியிட்டவுடன் எங்களது பிரசார பணிகள் தொடங்கும் என கூறினார்.

    பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

    • முகேஷ் அம்பானி நடத்தும் 3-நாள் விருந்து நிகழ்ச்சி ஜாம் நகரில் நடைபெறுகிறது
    • கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின், ஹர்திக், கேஎல் ராகுல் ஆகியோர் வந்துள்ளனர்

    இந்தியாவின் நம்பர் 1 கோடீசுவரர் முகேஷ் அம்பானி (66). இவரது நிகர சொத்து மதிப்பு $115 பில்லியனுக்கும் மேல் உள்ளது.


    முகேஷ் அம்பானியின் இளைய மகனான 28 வயதான ஆனந்த் அம்பானிக்கும் (Anant Ambani), ராதிகா மெர்ச்சன்ட் (Radhika Merchant) என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

    திருமணத்தை முன்னிட்டு முகேஷ் அம்பானி நடத்தும் 3-நாள் விருந்து நிகழ்ச்சி குஜராத் மாநில ஜாம் நகரில் (Jam Nagar) தற்போது நடைபெறுகிறது.

    உலகெங்கிலும் இருந்து சுமார் 1200 விருந்தினர்கள் பங்கு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள பல பிரபலங்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவராக குஜராத் ஜாம் நகரில் வந்து இறங்குகின்றனர்.

    முன்னதாக ஜாம் நகர் மக்களுக்கு அம்பானி குடும்பம் அளித்த விருந்து உபசாரம் நடைபெற்றது.

    ஆசியாவின் முன்னணி கோடீசுவரரான முகேஷ் அம்பானி வீட்டு திருமணம் என்பதால், பல துறை சார்ந்த பிரபலங்களும் ஒரே இடத்தில் குவியும் அரிய நிகழ்வை இந்திய மக்கள் காண்கின்றனர்.

    பாலிவுட் பிரபலங்களான ஷாருக் கான், அமிதாப் பச்சன், இந்திய தொழிலதிபர்கள் கவுதம் அதானி, குமார் மங்கலம் பிர்லா, உலக தொழிலதிபர்களான மார்க் ஜுக்கர்பர்க், பில் கேட்ஸ், கிரிக்கெட் வீரர்கள் டோனி, பிராவோ, சச்சின் , ஹர்திக் பாண்ட்யா, கேஎல் ராகுல் ஆகியோர் வந்துள்ளனர்.





    மேலும், கூகுள் தலைமை செயல் அதிகாரி அதிபர் சுந்தர் பிச்சை, முன்னாள் கனடா பிரதமர் ஸ்டீஃபன் ஹார்பர், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் ஆகியோரும் வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    உலக புகழ் பெற்ற பாடகி ரிஹானாவின் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    ×