search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai selam express way"

    சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்ய கூடாது என காவல் துறைக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiSalemExpressway #MadrasHC
    சென்னை:

    சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது, அமைதியான முறையில் சாலைக்கு எதிராக கையெழுத்து பெற்றவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இதனையடுத்து, சாலைக்கு எதிராக அமைதியாக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியது.

    ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராடத்தை முன்னெடுக்க அனைவருக்கும் உரிமையுள்ளது என்ற ஐகோர்ட்டு, அமைதியை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் யார் என்பதை அடையாளம் காணவேண்டும் என்றும் கூறியுள்ளது.
    சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்கவில்லை என்றால் 8 வழிச்சாலை திட்டத்தை தொடரமாட்டோம் என மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. #ChennaiSalemExpressway #MadrasHC
    சென்னை:

    சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு செய்யாமல் செயல்படுத்தப்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது, 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.இதனை அடுத்து கடந்த 14-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர். 

    இந்நிலையில், இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சாலைக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக 1200 மரங்கள் நட இருய்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமல் சட்டப்படி திட்டத்தை தொடர முடியாது, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி அவசியம் என மத்திய அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 

    விசாரணையின் போது, திட்டத்துக்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiSalemExpressway #MadrasHC
    சென்னை:

    சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சுற்றுச்சூழல் மதிப்பீடு ஆய்வு செய்யாமல் செயல்படுத்தப்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது, 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறி மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. திட்டம் தொடர்பான அறிக்கையில் முரன்பாடு இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், திட்டத்துக்கு நிலம் கையப்படுத்த காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தனர். 
    சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள் செய்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதிய அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. #ChennaiSalemExpressway #NHAI
    டெல்லி:

    சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எதிர்ப்புக்கு மத்தியில் சாலை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டதில் பல மாற்றங்களை செய்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அந்த அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலத்தில் உள்ள கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் - சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் 13.2 கி.மீ.க்கு பதில் 9 கி.மீ. தூரம் மட்டுமே சாலை அமைக்கப்படும்.

    300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் வனப்பகுதி மட்டும் கையகப்படுத்தப்படும். வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும். திட்ட மதிப்பீடு ₹ 10 ஆயிரம் கோடியில் இருந்து ₹7210 கோடியாக குறைப்பு. முதல் கட்டமாக 6 வழிச்சாலை மட்டுமே போடப்பட உள்ளது. பின்னர், தேவைக்கு ஏற்றது போல 8 வழிச்சாலையாக மாற்றப்படும்.

    ஆகிய மாற்றங்கள் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு மரங்களை வெட்டக்கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கும் தடை விதிக்க நேரிடும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. #ChennaiSalemExpressway #MadrasHC
    சென்னை:

    சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான பொதுநல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் தலைமையிலான அமர்வு முன்னர் இன்று விசாரணைக்கு வந்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் 8 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டப்படுவது எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது குறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    மேலும், சமூக பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை எந்த நிலையில் உள்ளது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 8 வழிச்சாலைக்கு மரங்களை வெட்ட கூடாது என்ற உத்தரவை மீறினால் மொத்த திட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    அரசு அதிகாரிகளின் நிலங்களை கையகப்படுத்தினால்தான் மக்களின் நிலை புரியும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 
    சென்னை - சேலம் விரைவு சாலை அமைக்க விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். #EdappadiPalaniswami #ChennaiSelamExpressWay
    சேலம்:

    சென்னை - சேலம் எட்டுவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கு எதிராக பேசுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை - சேலம் விரைவு சாலைக்கான எல்லைக்கற்கள் நடப்பட்டுள்ளன. விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர். நிலம் கொடுப்பவர்களுக்கு முந்தைய காலங்களை விட அதிக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் அதிகரிக்கும் போது, சாலையை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது அரசின் கடமை.

    போராட்டத்தில் ஈடுபடுவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாலே கைது செய்யப்படுகின்றனர். நீதிமன்றம் என்பது பொதுவானது. அதன் தீர்ப்பை யாரும் விமர்சிக்க உரிமை இல்லை. சேலம் இரும்பாலை தனியார்மயம் ஆவதை பிரதமர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    ×