search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Civil Service Exam"

    • குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டி தேர்வுகள் குறித்த திருத்தப்பட்ட புதிய அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2030 பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி நடைபெறுகிறது.

    குரூப் 1, 1பி மற்றும் 1சி பணியிடங்களுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 90 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 7ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி மற்றும குரூப் சி தேர்வு ஜூலை 12ம் தேதி நடைபெறுகிறது.

    105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் / முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் பதவி) தேர்வு ஆகஸ்டு 11ம் தேதி நடைபெறுகிறது.

    605 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- பட்டம் / முதுகலை பட்டப்படிப்பு நிலை (நேர்காணல் அல்லாத பதவி) தேர்வு அக்டோபர் 10ம் தேதி நடைபெறுகிறது.

    730 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு- டிப்ளமோ/ஐடிஐ நிலை தேர்வு நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.

    50 பணியிடங்களுக்கான வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர் தரம் II (முதன்மை) தேர்வு வரும் டிசம்பர் மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது.b 

    • கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியது
    • கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்

    கடந்த 2023ல் நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியாகியது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 1,016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அவமானப்படுத்திய நிலையில் தனது போலீஸ் கான்ஸ்டபிள் வேலையை ராஜினாமா செய்த உதய் கிருஷ்ணா ரெட்டி இந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் 780வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    சாதாரண அரசுப் பள்ளியில் தெலுங்கு வழியில் படித்த உதய் கிருஷ்ணா ரெட்டிக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து 2018- வரையில் காவல்துறையில் கான்ஸ்டபிளாக அவர் பணியாற்றி வந்தார். கான்ஸ்டபிளாக இருந்த போதும் உதய் கிருஷ்ணா ரெட்டியை அழைத்த சர்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனிப்பட்ட வெறுப்பு காரணமாக சுமார் 60 போலீசார் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

    இதனால் விரக்தி அடைந்த உதய் கிருஷ்ணா ரெட்டி அன்றைய தினமே போலீஸ் பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகிய நிலையில், தீவிர பயிற்சி மேற்கொண்டு தற்போது யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

    தனது இந்த சாதனை குறித்து பேசிய உதய் கிருஷ்ணன் ரெட்டி, "என்னை அவமானப்படுத்திய சர்கிள் இன்ஸ்பெக்டர் தனது தவறை ஒருநாள் உணர்வார். உயர் அதிகாரிகளுக்கும் கடை நிலை ஊழியர்களுக்கும் இடையே உள்ள பெரிய இடைவெளியை களைய நான் முயற்சிப்பேன்

    780வது இடம் பெற்றுள்ள உதய் கிருஷ்ணா ரெட்டி, இந்திய வருவாய் சேவைக்கு நியமிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், இந்திய நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வரை தொடர்ந்து தேர்வு எழுதப்போவதாக உதய் கிருஷ்ணா ரெட்டி கூறியுள்ளார்.

    • லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் பயிற்சி வகுப்பின் இடையே திடீரென சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த 20 வயது மாணவர், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா லோதி என்று அடையாளம் காணப்பட்டார்.

    சிசிடிவி காட்சியின்படி, லோதி வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். 

    அப்போது அவர் திடீரென மார்பைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தது சிசிடிவி காட்சி காட்டுகிறது.

    அதிர்ச்சியடைந்த சக மாணவரகள் லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    லோதியின் மரணம் சமீபத்தில் இந்தூரில் நடந்த நான்காவது சம்பவம் ஆகும். இது இளைஞர்கள் மத்தியில் "அமைதியான மாரடைப்பு" ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றிய கவலையைத் தூண்டுகிறது.

    இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது.
    • சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது.

    தெலுங்கானா மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் நடத்தப்படும் TSPSC தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏழு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

    குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. உதவியோடு இயங்கும் சாட்ஜிபிடி சேவையை பயன்படுத்தி கேள்விக்கான பதில்களை பெற்ற சம்பவம் அம்பலமாகி இருக்கிறது. இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, சிறப்பு புலனாய்வு படை நடத்திய விசாரணையில் இந்த விவரங்கள் தெரியவந்தது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    பதில்களை பெற்றதோடு, அவற்றை ப்ளூடூத் இயர்போன் மூலம் மற்ற தேர்வர்களுக்கும் தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடி போன்று அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு, வசமாக சிக்கிக் கொண்ட சம்பவம் நாட்டிலேயே முதல் முறையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு பேருக்கு பதில் அனுப்பிய பூலா ரமேஷ் என்ற நபரை புலனாய்வு படையினர் விசாரணை செய்தது.

    ரமேஷ் என்ற நபர், தேர்வு தொடங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன்னதாகவே வினாத்தாளை எடுத்து, சாட்ஜிபிடி சேவை மூலம் பதில்களை பெற்றுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்ட ஏழு தேர்வர்களும், தேர்ச்சி பெறுவதற்காக ஆளுக்கு ரூ. 40 லட்சம் வரை வழங்க தயாராக இருந்துள்ளனர். அதன்படி மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் ரமேஷ் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட உதவியிருக்கிறார்.

    தொடர்ந்து இலவசமாகவே கிடைப்பதால், ஏ.ஐ. டூல்களால் ஏற்படும் அபாயம் குறித்த கவலை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. சாட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாஃப்ட் பிங் உள்ளிட்ட ஏ.ஐ. டூல்கள் தற்போது செயலி வடிவிலேயே கிடைக்கின்றன. ஏ.ஐ. டூல்கள் ஏராளமான பலன்களை வழங்கும் போதிலும், இவை ஏற்படுத்தும் அபாயங்களும் அதிகமாகவே உள்ளன.

    • வைத்திலிங்கம் எம்.பி. சான்றிதழ் வழங்கினார்
    • புதுவைப் படைப்பாளர் இயக்கம் புதுவைப் பிரபா, செம்பணிச்சிகரம் ஜெ.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    புதுச்சேரி:

    மாரியப்பனார்-சுந்த ராம்பாள் அறக்கட்டளை சார்பில் ஜீவானந்தபுரம் நாடார் உறவின்முறைச் சங்கத்தில் மேனிலை எழுத்தர், இளநிலை எழுத்தர், காவல் ஆய்வாளர், காவலர், பண்டகக் காப்பா ளர் போன்ற புதுவை அரசுப் பணிகளுக்கான இலவச பயிற்சி நிறைவு விழா,பயிற்சி கையேடு வெளியீட்டு விழா மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.

    அறக்கட்டளை நிறுவுநர் மா.மா. மாரியப்பனார் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரை நிகழ்த்தினார். நண்பர்கள் தோட்டம் தலைவர் ப.திருநாவுக்கரசு நெறியாள்கை செய்தார். விழாவில், வைத்தி லிங்கம் எம்.பி. கலந்துகொண்டு பயிற்சிக் கையேட்டை வெளியிட, வைத்திய நாதன் எம். எல்.ஏ. பெற்றுக்கொண்டார். வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது: மாணவர்கள் தோல்வியைக் கண்டு கவலைப்படக்கூடாது தற்கொலை எண்ணங்களைக் கைவிட்டுவிட்டுக் கல்வியிலும், உழைப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றார் பயிற்சியின்போது நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதல் இடம் பிடித்த பிரகாஷ் ராஜ், சிவசக்தி மற்றும் தமிழமுது ஆகியோருக்கு ரொக்கப் பரிசுகளை அவர் வழங்கிப் பாராட்டினார்.

    மு. வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில்: தான் உழைப்பால் உயர்ந்ததையும், மாணவர்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கல்வியில் முன்னேற வேண்டும் என்றார். தட்டச்சு மாணவர்களுக்குச சான்றிதழ்களையும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார்.

    விழாவில் தொழிலதிபர் குமரகுரு பங்கேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத் தலைவர் தமிழ்மாமணி அ.டீசேன். நிழற்படக் கலைஞர் காரை இரா.நேரு, ஜீவானந்தபுரம் கிராமக்குழு ர.சபாநாயகம், தலைமை ஆசிரியர் சிகாசிநாதன், புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் புதுவைப் பிரபா, செம்பணிச்சிகரம் ஜெ.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    அரசுத் தேர்வுக்காக நடத்தப்பட்ட இந்த இலவசப் பயிற்சிக்காக இடத்தை இலவசமாக அளித்த ராசகுருவின் மகன், மதியழ்கள் பாராட்டப்பட்டார். பயிற்சி அளித்த ஆசிரியர்கள், உதவவுகம், செந்தில்குமார், அரிமாபிரபாகரன், பாராட்டபட்டனர், அருணகிரி, இளவரசி சங்கர் ஆகியோரும்

    விழாவின் இறுதியில், தேன்மொழி கோபாலன் நன்றி கூறினார்.

    விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ×