என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cleaning mission"
- பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
- மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பா ளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம், ஏரி, இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 16-வது வாரமான இன்று புதுவை அபிஷேகப்பாக்கம் அயிற்றூர் மகாதேவர் கோவிலில் உள்ள குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
பூரணாங்குப்பத்தை சேர்ந்த பச்சையப்பன், தவளக்குப்பம் ரமேஷ், மற்றும் கோஜூரியோ கராத்தே சங்கத் துணைத் தலைவர் மதிஒளி புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச்செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி செய்திருந்தார்.
- தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
- 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவ விழா 26-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி இன்று காலை நடந்தது.
பரிமளம் என்னும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு மூலவர் சன்னதி, கொடிமரம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டன.
கோவில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 12 மணி வரை சுமார் 6 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
இதேபோல் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
வரும் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பிரம்மோற்சவ விழா 26-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.
பிரம்மோற்சவ விழா நாட்களில் ஏழுமலையான் சமேதராக ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பூக்கள் பழங்கள் கொண்டு அலங்கரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவிலில் வெளிப்புறத்தில் வண்ண வண்ண மின்விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 66,199 பேர் தரிசனம் செய்தனர். 29,351 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ.4.17 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்