என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Coimbatore District"
- கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- கொரோனா பரவல் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி மற்றும் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றானது ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வந்தது. இதனால் கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 தினங்களாக பாதிப்பானது 50-யை தாண்டி பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 89 பேருக்கு தொற்று பதிவாகி இருந்த நிலையில், நேற்று 104 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
6 மாதங்களுக்கு பிறகு நேற்று மாவட்டத்தில் தொற்று பாதிப்பானது 100யை கடந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று தொற்றில் இருந்து குணமடைந்து 22 பேர் வீடு திரும்பினர். இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 727 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 429 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் தொற்று பரவல் அதிகமுள்ள பகுதிகளாக ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், எஸ்.எஸ்.குளம், குரும்பபாளையம் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டம் முழுவதும் தொற்று பரவல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு பணி மற்றும் சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
எஸ்.எஸ்.குளம் வட்டாரத்தில் குரும்பபாளையம் ஸ்ரீகார்டன் முதல் தெருவில் ஒரே வீட்டில் 4 பேருக்கும், ஆர்.எஸ்புரத்தில் ஒரே வீட்டில் 3 பேருக்கும் தொற்று உறுதியானதை அடுத்து அந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக (மைக்ரோ) அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய கிளாஸ்டர்கள் கண்டறியப்பட்டுள்ள 2 பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட தூய்மை பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர். தொடர்ந்து தொற்றுக்கு ஆளானவர்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அருணா கூறுகையில், ஒரே வீட்டில் 3 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டால் மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் முக கவசம் அணிய வேண்டும். அலட்சியம் ஆபத்தை விளைவிக்கும் என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
கோவையில் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியதாவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.2,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 33 ஆயிரத்து 627 பேர் எழுதினார்கள். அவர்களில் மாணவர்கள் 14 ஆயிரத்து 879 பேரும், மாணவிகள் 18 ஆயிரத்து 748 பேரும் ஆவார்கள். பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
இதில் கோவை மாவட்டம் 97.67 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 32 ஆயிரத்து 842 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 14 ஆயிரத்து 375 பேரும், மாணவிகள் 18 ஆயிரத்து 467 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 96.61 சதவீதமும், மாணவிகள் 98.50 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.48 சதவீதம் அதிகமாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-1 தேர்வில் மாநில அளவில் கோவை மாவட்டம் 3-வது இடம் பிடித்துள்ளது.
கோவை கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 384 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 13 ஆயிரத்து 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 97.98 ஆகும். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 827 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 4 ஆயித்து 672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 96.79 ஆகும். பேரூர் கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 746 பேர் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 591 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 97.70 ஆகும். எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 670 பேர் தேர்வு எழுதினர். இதில் 8 ஆயிரத்து 466 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 97.65 ஆகும்.
81 அரசு பள்ளிகளில் 7 ஆயிரத்து 624 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 7 ஆயிரத்து 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.78 ஆகும். 16 மாநகராட்சி பள்ளிகளில் 1,728 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,612 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 93.29 ஆகும். 4 நகராட்சி பள்ளியில் 576 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 545 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 94.62 ஆகும். 2 ஆதிதிராவிடர் பள்ளிகளில் 37 பேர் தேர்வு எழுதினர். இதில் 34 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 91.89 ஆகும். 7 சுய நிதி பள்ளியில் 714 பேர் பிளஸ்-1 தேர்வை எழுதினர். இதில் 698 பேர் தேர்ச்சியடைந்தனர். இது 97.76 சதவீதம் ஆகும். 1 ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் 131 பேர் தேர்வு எழுதினர். இதில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 99.24. 41 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 ஆயிரத்து 102 பேர் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 999 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.55 ஆகும். 203 மெட்ரிக் பள்ளிகளில் 15 ஆயிரத்து 715 பேர் தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 674 பேர் தேர்ச்சியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 99.74 ஆகும்.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன் வெளியிட்டார்.
கடந்த 1.9.2018 வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 28 லட்சத்து 33 ஆயிரத்து 509 வாக்காளர்கள் இருந்தனர். புதிதாக 70 ஆயிரத்து 175 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். பெயர் நீக்குதல், இறந்தவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் என 41 ஆயிரத்து 723 பேர் நீக்கப்பட்டனர்.
இன்று வெளியிட்ட இறுதி பட்டியல் படி கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் மொத்தம் 28 லட்சத்து 61 ஆயிரத்து 961 வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் ஆண்கள் 14 லட்சத்து 17 ஆயிரத்து 683 பேர் ஆவார்கள்.
பெண்கள் 14 லட்சத்து 43 ஆயிரத்து 967 பேர். மூன்றாம் பாலினத்தவர்கள் 311 பேர். ஆண்களை விட பெண்கள் அதிகம் ஆவார்கள்.
தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு-
மேட்டுப்பாளையம்
ஆண்கள் - 1,34,994
பெண்கள்- 1,41,457
மூன்றாம் பாலினத்தவர்கள் - 30
சூலூர்
ஆண்கள் - 1,43,707
பெண்கள்- 1,47,711
மூன்றாம் பாலினத்தவர்கள் - 17
கவுண்டம்பாளயைம்
ஆண்கள் - 2,10,995
பெண்கள்- 2,11,117
மூன்றாம் பாலினத்தவர்கள் - 70
கோவை வடக்கு
ஆண்கள் - 1,58,538
பெண்கள்- 1,56,235
மூன்றாம் பாலினத்தவர்கள் - 29
தொண்டாமுத்தூர்
ஆண்கள் - 1,50,250
பெண்கள்- 1,51,343
மூன்றாம் பாலினத்தவர்கள் - 60
கோவை தெற்கு
ஆண்கள் - 1,21,028
பெண்கள்- 1,21,025
மூன்றாம் பாலினத்தவர்கள் - 14
சிங்காநல்லூர்
ஆண்கள் - 1,51,533
பெண்கள்- 1,52,706
மூன்றாம் பாலினத்தவர்கள் - 22
கிணத்துக்கடவு
ஆண்கள் - 1,46,586
பெண்கள்- 1,50,025
மூன்றாம் பாலினத்தவர்கள் - 34
பொள்ளாச்சி
ஆண்கள் - 1,04,722
பெண்கள்- 1,11,193
மூன்றாம் பாலினத்தவர்கள் - 14
வால்பாறை
ஆண்கள் - 95,327
பெண்கள்- 1,01,115
மூன்றாம் பாலினத்தவர்கள் - 14
இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் அலுவலக பணி நேரங்களில் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிகழ்ச்சியில் சப் -கலெக்டர் கார்மேகம், ஆர்.டி.ஒ. தனலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரவிக்குமார், மாநகராட்சி துணை கமிஷனர் காந்தி மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் கார்த்திக் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ராஜேந்திரன், அருள், சோமு, மூஷா இந்திய கம்யூனிஸ்டு தங்கவேலு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ராமமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் கார்த்திக் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் எம்.எல்.ஏ. கூறும் போது, கோவை மாநகராட்சி பகுதிகளில் குளக்கரை, நீர் நிலை பகுதிகளில் வசித்து வந்தவர்களுக்கு வெள்ளலூர், கீரணத்தம் பகுதிகளில் வீடு ஒதுக்கப்பட்டு அவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
ஆனால் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் பழைய இடத்தில் தான் உள்ளது. இதனை புதிய இடத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. சார்பில் பங்கேற்ற ராஜேந்திரன் கூறும் போது, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். அதற்கான படிவம் வழங்க வேண்டும் என்றார். #FinalVotersList
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்