search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coin Exhibition"

    • பழைமையான நாணயங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
    • வெளிநாட்டு நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் பாண்டியன் நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் வரவேற்றார். 2-வது வார்டு கவுன்சிலர் மாலதி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். மாற்றுத் திறனாளிகள் வாரத்தையொட்டி அந்த பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான இளம்ஞாயிறு என்பவரை கவுரவப்படுத்தும் வகையில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்தியாவின் பழைமையான நாணயங்கள் முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள நாணயங்களையும், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் நாணயங்கள் எங்கு தயார் செய்யப்படுகிறது? எந்த ஆண்டில் எந்தெந்த நாணயங்கள் தயார் செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது என்பதையும், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், பகத்சிங், ரவீந்திரநாத்தாகூர் உள்பட முக்கிய தலைவர்கள் படத்துடன் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள் பற்றிய முழு தகவல்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மாணவர்கள் விளக்கிக் கூறினார்கள். இதேபோல் வெளிநாட்டு நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. கண்காட்சியை பார்வையிட்டு வெளியே வந்தவர்களிடம் மாணவர்கள் அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தனர். இதில் ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் கலந்து கொண்டு ஆர்வமுடன் நாணயங்களை பார்வையிட்டு, தகவல்களை அறிந்துக் கொண்டனர்.

    எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வரும் நாணய கண்காட்சியில் சோழர் கால நாணயங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
    சென்னை:

    சர்வதேச அருங்காட்சியக விழா கடந்த 19-ந் தேதி முதல் நாளை (24-ந் தேதி) வரை கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் சர்வதேச அருங்காட்சியக விழா நடைபெற்று வருகிறது.

    இதில் சோழர் காலத்தில் புழக்கத்தில் விடப்பட்ட முத்திரை நாணயங்கள் முதல் உலோக நாணயங்கள் வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து பார்வையாளர்களுக்கு உதவி காப்பாட்சியர் சுந்தர்ராஜன் விளக்கி கூறினார். அதை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கேட்டு நாணயங்கள் பற்றி தெரிந்து கொண்டனர்.

    அருங்காட்சியகத்தில் நாணயவியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளவை பற்றிய விவரம் வருமாறு:-

    அரைப்படி, கால்படி, உழக்கு, அரை உழக்கு, கால் உழக்கு என்று அளக்கப்பயன்படுத்திய மற்றும் பயன்படுத்துகிற அளவைகளும், எடைகளும் இடம் பெற்றுள்ளன. அரிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் ஆகியவையும் வைக்கப்பட்டு உள்ளன.

    இந்தியாவில் முதல் முதலாக முத்திரை நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக சோழ மன்னர்கள் பயன்படுத்திய முத்திரை நாணயங்கள் மற்றும் நாணயங்கள் இடம் பெற்று உள்ளன. இதேபோல் கிரேக்கர்களின் பதக்கமும், கஜினி முகமதுவின் பதக்கமும் உள்ளன.

    ரூபாய் நோட்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகள், பழமையான ஆயிரம் ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500, 100, 50, 20, 10, 5, 2, 1 ரூபாய் நோட்டுகள் இடம் பெற்றன. ஒரு பைசா, 2 பைசா, 3 பைசா, 5 பைசா, ஒரு அணா, 10 பைசா, 25 பைசா, 50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் ஆகிய நாணயங்கள் இடம் பெற்றன. அவற்றில் பெரும்பாலானவை அசலானவை.

    இதில் தபால் தலை கண்காட்சியும் இடம் பெற்றது. நாணய மற்றும் தபால் தலை கண்காட்சியை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இப்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகளும் திரளாக வந்து ரசித்தனர். 
    ×