என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » collector rohini
நீங்கள் தேடியது "collector rohini"
சேலம் பாராளுமன்ற தொகுதியில் 161 பதட்டமான வாக்குச்சாவடிகள் என்றும் மாவட்டம் முழுவதும் 240 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும் மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #LSPolls #SalemDistrict #CollectorRohini
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளது. சேலம் பாராளுமன்ற தொகுதியில் 15 லட்சத்து 92 ஆயிரத்து 487 வாக்காளர்கள் உள்ளனர்.
583 மையங்களில் 1809 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. சேலம் பாராளுமன்ற தொகுதியில் 161 பதட்டமான வாக்குச்சாவடிகள் என்றும் மாவட்டம் முழுவதும் 240 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் புகார்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், உதவு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 4257020-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள் தேர்தல் மீறல்கள் தொடர்பான புகார்களை சி விஜில் என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் பதுவு செய்யலாம்.
சேலம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங்கள் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும், அலுவலர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தபபட உள்ளது.
பொதுமக்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்பதை அறிந்துது கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 1950-க்கு நேரடியாக அழைத்து விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அரசியல் கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது, பொது சுவர்களில் அனுமதி இல்லாமல் விளம்பரம்செய்யக் கூடாது, ஏற்கனவே செய்யப்பட்ட விளம்பரங்களை அழிக்கும் செலவு அரசியல் கட்சியினர் தேர்தல் செலவில் சேர்க்கப்படும்.
அரசு புதுத் திட்டங்களை தொடங்கக் கூடாது, பழைய திட்டங்களை விரிவுபடுத்தக் கூடாது, பேனர்கள் வைக்கக் கூடாது. பதட்டமான வர்குச் சாவடிகளுக்கு துணை ராணுவம் அல்லது மத்திய பாதுகாப்பு படையை அழைப்பது குறித்து ஆலோசனை செய்து தேர்தல் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.
மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது, இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக் கூடாது, பள்ளிகள் அருகில் பிரசாரம் செய்யக் கூடாது. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும். அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிதிகள் மட்டும் ரூ. 1 லட்சம் வரை எடுத்துச் செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #SalemDistrict #CollectorRohini

சேலம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியை கலெக்டர் ரோகிணி நேற்று தொடங்கி வைத்தார்.
சேலம்:
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர், மாணவிகள் முன்னிலையில் கலெக்டர் ரோகிணி, மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பூங்கொடி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி ஆகியோரும் குடற்புழு நீக்க மாத்திரைகளை சாப்பிட்டனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-
மத்திய அரசால் ஆண்டுக்கு இருமுறை (6 மாதத்திற்கு ஒரு முறை) நாடு தழுவிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதல் சுற்று தற்போது தொடங்கி உள்ளது. இதன்படி 1 வயது முதல் 19-வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி, இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
கழிவறைகளை பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், சுத்தமான குடிநீர், காய்கறி பழங்களை சுத்தம் செய்தபின் உட்கொள்ளுதல், காலணிகளை அணிதல், உணவுக்கு முன், பின் மற்றும் கழிவறையைப் பயன்படுத்திய பின் சோப்புப்போட்டு கைகளை கழுவுதல் ஆகிய பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் குடற்புழு தொற்று ஏற்படுவதை தடுக்கலாம்.
இத்திட்டத்தில் மூலம் சேலம் மாவட்டத்தில் 12 லட்சத்து 16 ஆயிரத்து 326 குழந்தைகள் பயனடைய உள்ளனர். அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் இக்குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சார்ந்த 6 ஆயிரத்து 984 பணியாளர்கள் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும், விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 14-ந் தேதி அன்று அல்பெண்டசோல் மாத்திரை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

சேலம் மாவட்டத்தில் 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம்:
உலக எய்ட்ஸ் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலகம் மூலம் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மனித சங்கிலி சேலம் அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்தது. இதை கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி நின்றனர்.
அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர்(பொறுப்பு) அருணாசலம் வரவேற்றார். அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர்(பொறுப்பு) சத்யா, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எச்.ஐ.வி. கிருமியின் அளவை கணக்கீடு செய்யும் கருவியை கலெக்டர் ரோகிணி அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் மிக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டத்தில் ஒன்றாக சேலம் மாவட்டமும் திகழ்கிறது. இருப்பினும் அவர்களுக்கான சிறப்பான மருத்துவ சிகிச்சை, எச்.ஐ.வி. தடுப்பு பணி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக செய்து வருகிறோம். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள எச்.ஐ.வி. கிருமியின் அளவினை கணக்கீடு செய்யும் கருவி மூலம் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களில் ஏ.ஆர்.டி. மையங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 24,318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சேலம் மாவட்டத்தில் 94,858 பேர் எச்.ஐ.வி. பரிசோதனையும், ஆலோசனையும் பெற்றுள்ளனர். இதில் 363 பேருக்கு புதியதாக எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 15 கர்ப்பிணிகள் அடங்குவர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அன்பு செலுத்தி அரவணைப்பதன் மூலம் சமூக புறக்கணிப்பு இல்லாமையை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு மேற்பார்வை யாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.

சேலம் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் ரூ.138.39 கோடி மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். #SalemCollector
சேலம்:
வேளாண்மை துறை மானியம் குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்ததாவது:-
சேலம் மாவட்டத்தில் 11 வட்டாரங்களில் 161 நீர் வடிப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 72578 எக்டர் நிலப்பரப்பில் இயற்கை வள மேம்பாட்டு பணிகளில் நிலம் சமன்படுத்துதல், கல்வரப்பு அமைத்தல், பண்ணைக்குட்டை, கசிவு நீர்குட்டை அமைத்தல், தடுப்பணை கட்டுதல், பண்ணை உற்பத்தி பணிகளில் பழமரக்கன்றுகள் நடவு செய்தல், பண்ணைக்கருவிகள் வழங்குதல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு பணிகளில் தையல் எந்திரங்கள் வழங்குதல், சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல் ஆகிய 10,112 பணிகளுக்காக ரூ.56.10 கோடி செலவிடப்பட்டது.
வோளாண் பொறியியல் துறையின் மூலம் சூரிய சக்தியில் இயங்கும் 5 எச்பி, 7.5 எச்பி மற்றும் 10 எச்பி திறனுடைய திறந்தவெளி கிணறு மோட்டார் பம்புகள் மற்றும் ஆழ்துளை கிணறு மோட்டார் பம்புகள் மாநில அரசின் நிதியிலிருந்து 40 சதவீதமும், மத்திய அரசின் நிதியிலிருந்து 20 சதவீதமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகத்தின் மூலம் 30 சதவீதம் என 90 சதவீதம் மானியமாகவும் விவசாயிகளின் பங்களிப்பு 10 சதவீதமுமாக இந்த மோட்டார் பம்புகள் வழங்கப்படுகிறது.
வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக அனுமதிப்படும் மானிய தொகையாக 35 பிஎச்பி டிராக்டர் ரூ.63,000 மானியமும், தட்டு வெட்டும் கருவிக்கு (3 எச்.பி. மேல்) ரூ.20,000 மானியமும், தட்டு வெட்டும் கருவிக்கு (5 எச்பி வரை) ரூ.25,000 மானியமும், கலப்பை (5 எச்.பி) ரூ.19,000 மானியமும், கலப்பை (9 கொளு) ரூ.44,000 மானியமும், டிஸ்க் கலப்பைக்கு ரூ.44,000 மானியமும் உள்பட பல மானியமும் வழங்கப்படுகிறது.
மேலும், இது தொடர்பான விபரங்களுக்கு வேளாண் இணை இயக்குநர், செரி ரோடு, சேலம்1. என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். #SalemCollector

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மனு நீதிநாள் முகாமில் வீட்டை விட்டு மகன் விரட்டியதால் மூதாட்டி கலெக்டர் ரோகிணி காலில் விழுந்து கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 70). மனு நீதி நாளான இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சரஸ்வதி திடீரென கலெக்டர் காலில் விழுந்து கதறினார். பின்னர் அவர் கூறியதாவது:-
நான் கருங்கல்பட்டியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். எனது கணவர் இறந்து விட்ட நிலையில் எனது மகனும், மருமகளும் வீட்டை விட்டு துரத்தி விட்டனர்.
நான் எந்த ஆதரவும் இல்லாமல் அனாதையாக இருக்கிறேன். இது குறித்து எனது மகன், மருமகளிடம் விசாரித்J விட்டு என்னை ஒரு ஆதரவற்ற இல்லத்தில் சேர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டம் நாளை காந்தி பிறந்த தினத்தன்று நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டம் நாளை (செவ்வாய்க் கிழமை) காந்தி பிறந்த தினத்தன்று நடைபெறவுள்ளது என மாவட்ட கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய, மாநில அரசின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராமசபா நடைபெற உள்ளது. கூட்டத்தில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்படுத்த தடை செய்தல், திறந்தவெளி மலம் கழிக்கப்படாத ஊராட்சிகளாக அறிவித்தல், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல்,
ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையக் கழிப்பறைகள் பயன்படுத்தப்படுத்துவது குறித்து விவாதித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், கிராம வளர்ச்சித்திட்டம் குறித்து விவாதம் செய்தல் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்துதல்,
கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், திட்ட அறிக்கை, முதல் அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2018-19, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் திட்ட அறிக்கை முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குதல் மற்றும் அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த விளக்க உரையும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படவுள்ளது.
இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறி உள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 386 கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு 3 சக்கர சைக்கிள்களும், 6 பயனாளிகளுக்கு ஓய்வூதியதாரர் உத்தரவு ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சாரதா ருக்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் 3 ஆயிரம் பேரை நீக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம் நேற்று 2-வது கட்டமாக 3,288 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. சி.எஸ்.ஜ தொழில்நுட்ப கல்லூரி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நேற்று நடந்த வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமை கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற 30-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள சட்டமன்ற தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவர்.
மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமில் இதுவரை 22 ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இதில் 3 ஆயிரம் பேரின் பெயரை நீக்க விண்ணப்பிக்கப்பட்டு இருக்கிறது. இறந்துபோன மற்றும் இரட்டை பதிவாக இருக்கும் அவர்களின் பெயரை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இரட்டை பதிவு கொண்ட நபரின் பெயரை இரு இடத்திலும் நீக்கி விடுவதாக அரசியல் கட்சியினர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதை மிக கவனமுடன் பார்த்து ஒரு இடத்தில் மட்டும் பெயரை நீக்க வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். கல்லூரியில் படிக்கும் 18 வயது நிரம்பிய மாணவர்களை வாக்காளர்களாக சேர்க்க ஒவ்வொரு கல்லூரியிலும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்து வருகின்றோம். இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.
இந்த ஆய்வின் போது சேலம் வருவாய் கோட்டாட்சியர்(பொ) ஜெகநாதன், தாசில்தார்கள் திருமாவளவன், தீபசித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகிற 8-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 8-ந்தேதி (புதன்கிழமை) அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.
இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த மாதம் 8-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக செயல்படும்.

இயற்கை இடர்பாடுகள் குறித்த தகவலுக்கு 1077என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #SalemEarthquake #SalemCollector
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் இன்று ஓமலூர், காடையாம் பட்டி, சேலம் உள்ளிட்ட வட்டங்களில் 7.47 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இதுபோன்ற நிலநடுக்கம் உணரப்படும் நேரங்களில் பொதுமக்கள் பதற்றமின்றி இருக்கும்படியும், ஜன்னல், கண்ணாடி, கதவுகள், அலமாரிகள் உள்ளிட்டவற்றின் அருகில் நிற்க வேண்டாம் என்றும் மின்தூக்கியை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் பாலங்கள், உயர் மின் அழுத்தம் கம்பிகள், விளம்பர பலகைகள் அருகில் நிற்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் நெருக்கமான கட்டங்களை தவிர்த்து, வெட்டவெளியில் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவல்களுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-யை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார். #SalemEarthquake #SalemCollector

×

X