என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "common question paper"
- காலாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட கல்வித்துறை சார்பில் வினாத்தாள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
திருப்பூர்:
பள்ளிக்கல்வித்துறையில் 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வரும் 19ந் தேதி முதல் 27ந் தேதி வரை, காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வுக்கு வழக்கமாக, அந்தந்த மாவட்ட கல்வித்துறை சார்பில் வினாத்தாள் அச்சிட்டு பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
ஆனால் தற்போது நடக்கவுள்ள காலாண்டு தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து வரும் வினாத்தாளை அந்தந்த மாவட்டங்களில் நகலெடுத்து தேர்வு நாளன்று காலை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், காலாண்டு தேர்வை பொதுவினாத்தாள் முறையில் நடத்துவதன் மூலம், கல்வியில் பின்தங்கிய பள்ளிகளை கண்டறியலாம்.
அங்குள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணலாம். குறிப்பாக 6-ம் வகுப்பில் இருந்தே, பொது வினாத்தாள் முறையில் இனிவரும் தேர்வுகளை நடத்த வேண்டும்.
அப்போது தான் மாணவர்களின் கற்றல் நிலையை பரிசோதிக்க முடியும் என்றனர்.