என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » congress leader adhir ranjan chowdhury
நீங்கள் தேடியது "Congress leader Adhir Ranjan Chowdhury"
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பச்சோந்தி போன்று நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வருவதாக காங்கிரஸ் எம்.பி. விமர்சித்துள்ளார். #NRCAssam #Mamata
புதுடெல்லி:
வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதி வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. 40 லட்சம் பேர் இந்த பதிவேட்டில் விடுபட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேசிய குடிமக்கள் பதிவேடு, உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.
“40 லட்சம் மக்கள் விடுபட்டதை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். 2005ல் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அவர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அப்போது எச்சரித்தார். இப்போது தனது நிலையை பச்சோந்தி போன்று மாற்றிக்கொண்டுள்ளார்.
அசாமை விட்டு வெளியேற்றப்படுவோருக்கு தங்குவதற்கு இடம் அளிக்கப்படும் என மம்தா உறுதி அளித்துள்ளார். ஆனால், அவர் அசாம்-மேற்கு வங்க எல்லையை மூடிவிட்டார். அதனால் யாரும் மேற்கு வங்கத்திற்குள் நுழைய முடியாது. இத்தகைய இரட்டை நிலைப்பாடு, 40 லட்சம் மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்தார் சவுத்ரி.
என்ஆர்சி பட்டியல் வெளியான பிறகு உள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் அசாம் மாநிலம் வந்தபோது அவர்களை சில்சார் விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #NRCAssam #Mamata

இந்நிலையில் என்ஆர்சி விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
“40 லட்சம் மக்கள் விடுபட்டதை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். 2005ல் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அவர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என அப்போது எச்சரித்தார். இப்போது தனது நிலையை பச்சோந்தி போன்று மாற்றிக்கொண்டுள்ளார்.
அசாமை விட்டு வெளியேற்றப்படுவோருக்கு தங்குவதற்கு இடம் அளிக்கப்படும் என மம்தா உறுதி அளித்துள்ளார். ஆனால், அவர் அசாம்-மேற்கு வங்க எல்லையை மூடிவிட்டார். அதனால் யாரும் மேற்கு வங்கத்திற்குள் நுழைய முடியாது. இத்தகைய இரட்டை நிலைப்பாடு, 40 லட்சம் மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்தார் சவுத்ரி.
என்ஆர்சி பட்டியல் வெளியான பிறகு உள்ள நிலைமையை ஆய்வு செய்வதற்காக திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 8 பேர் அசாம் மாநிலம் வந்தபோது அவர்களை சில்சார் விமான நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #NRCAssam #Mamata
×

X