search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona special ward"

    • 100 படுக்கைகளுடன் விரிவாக்கம் செய்வதற்கும் தயாராக உள்ளோம்.
    • 89 வயது முதியவர் ஒருவர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    திருப்பூர் :

    கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையை பரிசோதித்து அறிவதற்கான ஒத்திகை நடைபெற்றது. திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் கொரோனா தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். 30 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த வார்டை டீன் பார்வையிட்டார். மருந்து, மாத்திரைகள், ஆக்சிஜன் தேவை உள்ளிட்டவை தயாராக வைத்திருந்தனர்.

    இதுகுறித்து டீன் முருகேசன் கூறுகையில், 'திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் கடந்த வாரம் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 2 பேர் குணமடைந்துவிட்டனர். 89 வயது முதியவர் ஒருவர் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். 30 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயாராக உள்ளது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போது 100 படுக்கைகளுடன் விரிவாக்கம் செய்வதற்கும் தயாராக உள்ளோம். தேவையான மருந்து, மாத்திரைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை போதுமான அளவு இருப்பில் உள்ளது. நிலைமையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக இருக்கிறோம் என்றார்.

    ×