என் மலர்
முகப்பு » couple purchase gold jewellery
நீங்கள் தேடியது "couple purchase gold jewellery"
பஞ்சாப்பில் உள்ள நகைக்கடையில் போலி ரூபாய் நோட்டுக்களை கொண்டு தங்கம் வாங்கிய ஜோடியை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது. #Punjab #FakeCurrency
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ஷியாம் சுந்தர் வர்மா. சமீபத்தில் இவரது கடைக்கு ஒரு தம்பதியினர் வந்தனர்.
தங்க நகைகள் வாங்க வந்துள்ளோம் எனக்கூறிய அவர்கள், அங்கிருந்த நகைகளில் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கு 59 கிராம் எடையுள்ள தங்க நகைகளை வாங்கினர். அதன்பின்னர் அவர்கள் அதற்கான பணத்தை ஷியாம் சுந்தர் வர்மாவிடம் கொடுத்து விட்டு அவசரமாக அங்கிருந்து சென்று விட்டனர்.
பணத்தை எண்ணி வைக்கும்போது, ரிசர்வ் வங்கி ஆப் இந்தியா என்ற இடத்தில் எண்டர்டெயின்மெண்ட் ஆப் இந்தியா என இருப்பதை கண்டு ஷியாம் சுந்தர் அதிர்ந்தார். தனக்கு வழங்கிய பணம் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டு என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் ஷியாம் சுந்தர் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனையை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற தம்பதியரை போலீசார் தேடி வருகின்றனர். #Punjab #FakeCurrency
×
X