search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Courtallam Main Falls"

    • வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது.
    • மெயினருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதைத் தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் தடையானது நேற்று முழுவதும் நீடித்தது. இந்நிலையில் இன்று காலை அருவியில் நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

    தற்போது கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ள நிலையில் மெயினருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர்.

    • மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் ஆர்வமுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
    • அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    தென்காசி:

    தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக கனமழை காரணமாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்தும் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலையில் பெய்த சாரல் மழையின் காரணமாக ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு திடீரென தண்ணீர் வருவது அதிகரித்தது. பின்னர் அது வெள்ளப்பெருக்காக மாறியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இதனால் குற்றாலத்திற்கு குளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று காலையில் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்த தால் வெள்ளப்பெருக்கும் குறைந்தது.

    இதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் ஆர்வமுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    இன்று காலை ஐந்தருவியில் 4 கிளைகளிலும், மெயின் அருவியில் மிதமான அளவிலும், பழைய குற்றால அருவியில் குறைந்த அளவும் தண்ணீர் கொட்டி வருகிறது. மேலும் குற்றாலத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இன்று அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ×