search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyril Ramaphosa"

    • 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
    • கடந்த 30 ஆண்டில் முதல்முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வென்றது.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

    கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதையடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தல் வாக்கெடுப்பில் சிறில் ரமபோசா 283 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜூலியஸ் மலேமா 44 வாக்குகளைப் பெற்றார்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • நவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
    • சீனாவும் ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கான முயற்சிகளை செய்து வருகிறது.

    ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளை ஆராய்வதற்காக ஆப்பிரிக்கத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளைக் கொண்ட தூதுக்குழுவினருடன் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா இன்று உக்ரைன் வந்து சேர்ந்தார்.

    கீவ் புறநகர் பகுதியான புச்சா பகுதி ரெயில் நிலையம் அருகே, உக்ரைன் சிறப்பு தூதுவர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தூதுவர்கள் அவரை சந்தித்தனர்.

    பிப்ரவரி 2022ல் உக்ரைனின் முழு அளவிலான படையெடுப்பின் உச்சகட்டமாக, புச்சா பகுதியில் நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தெருக்களிலும், வெகுஜன புதைகுழிகளிலும் சடலமாக கிடந்தனர். அந்த பகுதிக்கு ஆப்பிரிக்க தலைவர் வருகை தந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    ஆப்பிரிக்க தூதுக்குழுவில் ஜாம்பியா, செனகல், உகாண்டா, எகிப்து, காங்கோ குடியரசு மற்றும் கொமோரோ தீவுகள் ஆகிய நாடுகளின் மூத்த அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

    தங்கள் தூதுக்குழுவுடன் தனித்தனியான சந்திப்புகளுக்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒப்புக்கொண்டதாக ராமபோசா கடந்த மாதம் கூறியிருந்தார். 

    ரஷியாவின் உயர்மட்ட சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ஆப்பிரிக்க தூத்துக்குழுவினர் இன்று செல்கிறார்கள். நாளை புதினைச் சந்திக்க தயாராகி வருகின்றனர்.

    ஆப்பிரிக்க தலைவர்கள், சமாதானத்திற்கான முன்னெடுப்புகளைத் தொடங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிராமல், ரஷியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான சர்வதேச தடைகளுக்கிடையே ஆப்பிரிக்காவிற்கு மிகவும் தேவைப்படும் உர ஏற்றுமதிகளுக்கு எவ்வாறு பணம் செலுத்த முடியும் என்பதை மதிப்பிடுவதற்காகவும் பேச்சுவார்த்தை நடத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போருக்கு மத்தியில் உக்ரைனில் இருந்து அதிகளவில் தானிய ஏற்றுமதியை உறுதி செய்வது பற்றியும், அதிக கைதிகளை பரிமாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர்கள் விவாதிக்க உள்ளனர்.

    ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷிய படைகளை வெளியேற்றுவதற்காக, மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட நவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் எதிர்தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. முன்களப் பகுதியில் 1,000 கிலோமீட்டர் (600-மைல்) அளவுக்கு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், ஆப்பிரிக்காவின் இந்த அமைதி முயற்சி முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

    போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சி நீண்ட காலம் நீடிக்கும் என மேற்கத்திய நாடுகளின் ஆய்வாளர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனாவும் ஒரு அமைதி ஒப்பந்தத்திற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால், ரஷியாவும், உக்ரைனும் போர் நிறுத்தத்திற்கு சம்மதிப்பதற்கான அறிகுறி இல்லாததால், சீனாவின் முயற்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

    • தென் ஆப்பிரிக்க அதிபர் மீது பார்ம்கேட் என்னும் பண்ணை ஊழல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
    • தனது பண்ணை வீட்டில் ரூ.32 கோடி திருட்டு போனதை அதிபர் மறைத்ததால் அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    சியோல்:

    தென் ஆப்பிரிக்காவில் அதிபர் பதவி வகிப்பவர் சிரில் ரமபோசா (70). இவர் மீது 'பார்ம்கேட்' என்னும் பண்ணை ஊழல் விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இவர் தனது பண்ணை வீட்டில் இருந்து 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.32 கோடி) திருட்டு போனதை, தனது பதவியைத் தவறாக பயன்படுத்தி மறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த ஊழல் பற்றி ஒரு சுயாதீன குழு விசாரணை நடத்தி அதன் அறிக்கை வெளியே கசிந்து விட்டது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பாராளுமன்றம் ஆய்வுசெய்து அடுத்த வாரம் அதிபர் சிரில் ரமபோசா மீது 'இம்பீச்மெண்ட்' (பதவிநீக்க தீர்மானம்) கொண்டு வருவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். எனவே அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இந்தப் பணம், அவர் ஊழல் செய்து சேர்த்த பணம் என்ற புகார் எழுந்துள்ளது. ஆனால் அதிபர் சிரில் ரமபோசா இதை மறுத்துள்ளார்.

    தென்னாப்பிரிக்கா நாட்டின் அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தேர்வு செய்தனர்.
    கேப் டவுன்:

    தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டின் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.



    இந்நிலையில், அந்நாட்டின் அதிபராக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மீண்டும் தேர்வு செய்தனர். அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவை தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றிபெற்றதாக இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மோகோயேங் அறிவித்துள்ளார்.
    குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர். #RepublicDay #CyrilRamaphosa #ManmohanSingh #RahulGandhi
    புதுடெல்லி:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். இந்த விழாவில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இந்திய ராணுவத்தின் பெருமை மிகு அணிவரிசை, ராணுவத்தின் முப்படை அணிவகுப்பைத் தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் அலங்கார வாகனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் கண்கவர் வாகனங்களும் அணிவகுத்து வருகின்றன. குடியரசு தின விழாவை பல லட்சம் மக்கள் கண்டுகளித்தனர். 



    இந்நிலையில், சிறப்பு விருந்தினராக டெல்லி வந்துள்ள தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து பேசினர். இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தனர்.

    அப்போது, அதிபர் சிரில் ராமபோசா ராகுல் காந்தியை தென் ஆப்பிரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் உடனிருந்தார். #RepublicDay #CyrilRamaphosa #ManmohanSingh #RahulGandhi
    குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினராக டெல்லி வந்துள்ள தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசா இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #CyrilRamaphosa #RepublicDay
    புதுடெல்லி:

    டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில்  சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமாபோசா இருநாள் அரசுமுறை பயணமாக வந்துள்ளார்.

    இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு முப்படையினரின் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் மோடியை சந்தித்த சிரில் ரமாபோசா பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மைத்துறையில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றும் மூன்றாண்டுகால ஒப்பந்தம் இந்த ஆலோசனையின்போது கையொப்பமானது.

    இந்த ஆலோசனை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் அமைந்திருந்ததாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிரில் ரமாபோசா தெரிவித்தார்.  #CyrilRamaphosa #RepublicDay 
    5 நாள் அரசுமுறைப் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ் நேற்று தென்னாப்பிரிக்க அதிபர் சைரில் ரமபோசாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #CyrilRamaphosa #SushmainSouthAfrica #BRICS

    ஜோகனஸ்பர்க்:

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஜோஹனஸ்பர்க் நபரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள் மற்றும் விவாதிக்கப்படவுள்ள விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் இன்று (4-ம் தேதி) நடைபெறவுள்ளது.

    இந்த கூட்டத்திலும், இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாபிரிக்காவுடனான முத்தரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக புதுடெல்லியில் இருந்து நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.



    நேற்று ஜோகனஸ்பர்க் நகரை சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க நாட்டின் சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டுறவுத்துறை துணை மந்திரி லுவெல்லின் லான்டர்ஸ்-ஐ சந்தித்த சுஷ்மா சுவராஜ் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    அதன்பின் அந்நாட்டு அதிபர் சைரில் ரமபோசாவை சந்தித்து சுஷ்மா சுவராஜ் இருநாட்டு உறவுகள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #CyrilRamaphosa #SushmainSouthAfrica #BRICS
    ×