என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Danushka Gunathilaka"
- குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்க ஆஸ்திரேலிய உள்ளூர் கோர்ட்டு ஒன்று மறுப்பு தெரிவித்து விட்டது.
- தேசிய கிரிக்கெட் வீரர் குணதிலகா உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதுடன், வேறு எந்த அணி தேர்வுக்கும் அவர் பரிசீலனை செய்யப்படமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான தனுஷ்கா குணதிலகா டி20 உலக கோப்பை போட்டிக்கான குழுவில் இடம் பெற்றார். இதற்காக ஆஸ்திரேலியா சென்ற அவர், போட்டி தொடரின் இடையே ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.
இவருக்கு பதிலாக இலங்கை அணியில் பண்டாரா சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இலங்கை அணிக்கு உற்சாகமளிக்கும் வகையில் அணியுடன் தொடர்ந்து பயணித்தும், வீரர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.
இந்நிலையில், டேட்டிங் ஆப் மூலம் 29 வயது இளம்பெண்ணை தொடர்பு கொண்ட அவர், கடந்த 2-ந்தேதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஓட்டலில் அவரை சந்தித்து உள்ளார். இதன்பின், குணதிலகா இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதுபற்றி பெண் அளித்த புகாரை தொடர்ந்து சிட்னி போலீசார் குணதிலகாவை கைது செய்தனர்.
இந்த வழக்கில் குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்க ஆஸ்திரேலிய உள்ளூர் கோர்ட்டு ஒன்று மறுப்பு தெரிவித்து விட்டது. இதுபற்றி இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விஷயத்தில் ஐ.சி.சி.யுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு ஒரு முழுமையான விசாரணை விரைவாக தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்படுகிறார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கின்றது.
இதன்படி, தேசிய கிரிக்கெட் வீரர் குணதிலகா உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவதுடன், வேறு எந்த அணி தேர்வுக்கும் அவர் பரிசீலனை செய்யப்படமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை எந்தவகையிலும் சகித்து கொள்ள முடியாது என வலியுறுத்தியுள்ள வாரியம், விரைவில் விசாரணை நடத்தி முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி கூறியுள்ளது.
- குணதிலகாவை கைது விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நீதிமன்ற நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சிட்னி போலீசார், குணதிலகாவை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தனுஷ்கா குணதிலகா மீதான குற்றச்சட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் நடவடிககை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
'சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் வீரர் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டுள்ளார். குணதிலகா நவம்பர் 7ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கிரிக்கெட் வாரியம், நீதிமன்ற நடைமுறைகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும். மேலும் ஐசிசியுடன் கலந்தாலோசித்து, இந்த விஷயத்தில் ஒரு முழுமையான விசாரணையை விரைவாகத் தொடங்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் வீரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என இலங்கை கிரிக்கெட் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் குணதிலகா கைது செய்யப்பட்டதால் அவர் இல்லாமல இலங்கை அணி நாடு திரும்பியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றிருந்த அவர் உடனடியாக இலங்கை திரும்புகிறார். அவருக்குப் பதிலாக ஷெஹன் ஜெயசூர்யா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இலங்கை அணியின் முன்னணி வீரரான தினேஷ் சண்டிமல் கைவிரல் முறிவு காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ரபாடா, ஸ்டெயின், லுங்கி நிகிடி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில எடுபடவில்லை. இதனால் இருவரும் சிறப்பாக விளைாடி அரைசதம் அடித்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. குணதிலகா 57 ரன்னிலும், கருணாரத்னே 53 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து 60 ரன்கள் அடித்தார்.
மற்ற வீரர்களை நிலைத்து நின்று விளையாட விடாமல் மகாராஜ் சீரான இடைவெளியில் விக்கெட்டை வீழ்த்திக் கொண்டே இருந்தார்.
இலங்கை அணி 86 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல்நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. அகில தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். மகாராஜ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். #KeshavMaharaj #DanushkaGunathilaka #DimuthKarunaratne #DhananjayadeSilva
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்